மட்டக்களப்பில் வெசாக் தோரணங்கள்

vesak– பழுலுல்லாஹ் பர்ஹான்

மட்டக்களப்பு: வெசாக் தினத்தில் மட்டக்களப்பு மங்களராம ரஜமஹா விகாரையில் 2000 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளினால் நடாத்தப்பட்ட குண்டு வெடிப்பு சம்பவம் இடம்பெற்று சுமார் 14 வருடங்களுக்கு பிறகு மட்டக்களப்பு மங்களராம ரஜமஹா விகாரையில் பாரிய வெசாக் அலங்கார தோரணை நேற்று புதன்கிழமை கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நந்தன முனசிங்கவினால் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

இவ் பாரிய வெசாக் அலங்கார தோரணை திறந்து வைக்கும் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ்,மட்டக்களப்பு –அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் இந்து கருனாரத்ன,மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் எஸ்.பி. மெவன் சில்வா,மட்டக்களப்பு பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் அனுருத்த பண்டார ஹக்மன,வாழைச்சேனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் லால் செனவிரட்ன,மட்டக்களப்பு மாநகர சபையின் ஆணையாளர் உதயகுமார் உட்பட பொலிஸ் அதிகாரிகள்,பொலிஸ் படை ,விமானப்படை மற்றும் கடற்படை ,விஷேட அதிரடிப் படை,இராணுவம் ஆகியவற்றில் கடமையாற்றும் உத்தியோகத்தர்கள்,மட்டக்களப்பு சிவில் சமூக பிரதிநிதிகள்,தமிழ்முஸ்லிம் வர்த்தக பிரமுகர்கள்,பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்

vesak

புத்த பெருமான் பிறந்த தினம்,புத்த நிலை அடைந்த தினம்,இறந்த தினம் ஆகிய மூன்று பிரதான விடயங்களை வைத்து பௌத்தர்களால் கொண்டாப்படும் வெசாக் பண்டிகையை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பொலிஸ் நிலையங்களின் வெசாக் அலங்கார கூடுகள் மட்டக்களப்பு தலைமைய பொலிஸ் நிலைய வலாகத்திலும் ,மட்டு-பொலிஸ் விடுதிக்கு முன்னாலும் அமைக்கப்பட்டுள்ளது .

DSC01331

மட்டக்களப்பு நகரில் அமைக்கப்பட்டுள்ள வெசாக் அலங்கார தோரணையும், வெசாக் அலங்கார கூடுகளையும் பார்வையிட பெரும் திரளான தமிழ்,முஸ்லிம்,சிங்கள பொது மக்கள் மட்டக்களப்பு நகருக்கு விஜயம் செய்து வருகின்றனர்.

vesak

Published by

Leave a comment