இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கட் சமர்: அடுத்த 8 ஆண்டுகளுக்குள் ஆறு மெகா தொடர்கள்!

ind v pak– அபூஸைனப்

லாகூர்: இந்தியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஒரு நற்செய்தி மட்டுமல்லாமல் உலக இரசிகர்களுக்கும் மற்றும் விளம்பரதாரர்களுக்கும் ஓர் நற்செய்தியாக அமையவிருக்கின்றது இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கட் தொடர்.

எதிர்வரும்2015 முதல் 2023ம் (8) ஆண்டுக்குள் இரு அணிகளும் மோதும் ஆறு கிரிக்கெட் தொடர்களை நடத்த இரு நாட்டு கிரிக்கெட் வாரியங்களும் முடிவு செய்துள்ளன.

இந்த ஆறு தொடர்களுமே முழு அளவிலான கிரிக்கெட் தொடர்களாக இருக்கும். அதாவது டெஸ்ட், ஒரு நாள் தொடர் மற்றும் டுவென்டி 20 போட்டிகள் கொண்டதாக இது ஓர் மெகா தொடராக அமையவிருக்கின்றன.

கடந்த 2008ம் ஆண்டு மும்பையில் தீவிரவாதிகள் தாக்குதலை நடத்திய பின்னர் பாகிஸ்தானுடனான கிரிக்கெட் உறவை நிறுத்தி வைத்துள்ளது இந்தியா என்பது நினைவிருக்கலாம்.

ind v pak

இருப்பினும் 2012 டிசம்பர் – 2013 ஜனவரி மாதத்தில் ஒரு குறுகிய ஒரு நாள் தொடருக்காக பாகிஸ்தான் அணி இந்தியா வந்து போனது.உலகக் கிண்ண போட்டிகளிலும் விளையாடி இருந்தன.

இந்த நிலையில் இரு நாட்டு அணிகளும் மறுபடியும் முழு அளவிலான தொடர்களில் பங்கேற்க தீர்மானித்துள்ளன.

இதுதொடர்பாக இந்திய கிரிக்கெட் வாரியத்துடன் நேற்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

இந்த ஆறு தொடர்களில் நான்கு தொடர்களை பாகிஸ்தான் நடத்தும். 2 தொடர்களை இந்தியா நடத்தும்.

இந்தத் திட்டத்தின்படி இரு அணிகளும் 14 டெஸ்ட் போட்டிகள், 30 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 12 டுவென்டி 20 போட்டிகளில் விளையாடும் என்பது குறிப்பிடத்தக்கது.

போட்டியை பந்து தீர்மானித்தாலும், ‘குண்டு’ இரு அணிகளுக்கும் ஓர் தலையிடியாக இருந்துவருவது வரலாற்று உண்மையே!.

 

Published by

Leave a comment