கொழும்பு: யுத்த வெற்றியின் ஐந்தாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு வெற்றிவிழா அணிவகுப்பு மற்றும் தேசிய படை வீரர்கள் நினைவு தின நிகழ்வு வைபவங்கள் முப்படைகளின் தளபதியான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் நாளையும் நாளை மறுதினமும் கோலாகலமாக நடைபெறுகின்றன.
யுத்த வெற்றி அணிவகுப்பின் பிரதான வைபவம் நாளை காலை 8.00 மணிக்கு மாத்தறை நகரிலும், தேசிய படைவீரர்கள் நினைவு தின பிரதான வைபவம் நாளை மறுதினம் மாலை 4.00 மணிக்கு கொழும்பில் பாராளுமன்ற முன்றலில் அமைக்கப்பட்டுள்ள படைவீரர் நினைவு தூபிக்கு அருகிலும் இடம்பெறவுள்ளன.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் ஜனாதிபதியின் பாரியார் முதல் பெண்மணி சிரந்தி ராஜபக்ஷ, பிரதமர் டி. எம். ஜயரத்ன, சபாநாயகர் சமல் ராஜபக்ஷ, பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ், ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, பாதுகாப்புப் படைகளின் பிரதம அதிகாரி ஜெனரல் ஜகத் ஜயசூரிய, இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் தயா ரத்னாயக்க, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ஜயனாத் கொலம்பகே, விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் கோலித குணதிலக்க, பொலிஸ் மா அதிபர் என். கே. இளங்ககோன், சிவில் பாதுகாப்புப் படைப்பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் ஆனந்த பீரிஸ் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.
இதுதவிர, அமைச்சர்கள். பிரதி அமைச்சர்கள். மாகாண ஆளுநர்கள், முதலமைச்சர்கள், வெளிநாட்டு உயர் ஸ்தானிகர்கள், தூது வர்கள், தூதரகப் பாதுகாப்பு அதிகாரிகள், மதத் தலைவர்கள், அரச மற்றும் பாதுகாப்பு படைகளின் உயர் அதிகாரிகள் பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.
மாத்தறை நகரில் நடைபெறவுள்ள வெற்றி விழா அணிவகுப்பு பிரதான வைபவத்தில் இம்முறையும் இராணுவம், கடற்படை. விமானப்படை, பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்புப் படை வீரர்கள் என்ற அடிப்படையில் 7832 வீரர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். அவற்றில் 588 அதிகாரிகளும் 7244 வீரர்களும் அடங்குவர்.
கிளிநொச்சி பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க தலைமையில் நடைபெறவுள்ள இந்த வெற்றி அணிவகுப்பு நிகழ்வில் பிரிகேடியர் ஏ. டபிள்யூ. என். ரணவன்ன இரண்டாவது கட்டளை அதிகாரியாகக் கலந்து கொள்ளவுள்ளார்.
இந்த அணிவகுப்பில் வடக்கு. கிழக்கு மற்றும் வன்னிப் படையினர் பங்கு கொள்ளவுள்ளதுடன் மனிதாபிமான நடவடிக்கையின் போது களமுனையில் பயன்படுத்தப்பட்ட சகல கனரக ஆயுத தாங்கி வாகனங்கள், கவச வாகனங்கள், சமிக்ஞை கருவிகள் போன்ற இராணுவத்தின் 116 வாகனங்களும், யுத்தக் கப்பல்கள், தாக்குதல் கப்பல்கள், அதிவேக டோரா படகுகள் போன்ற கடற்படைக்குச் சொந்தமான 40 கப்பல்களும் விமானப்படைக்குச் சொந்தமான 35 தாக்குதல் விமானங்கள் மற்றும் ஹெலிகொப்டர்களும் மாத்தறை கடல் மற்றும் வான் பரப்பில் அணிவகுத்து மரியாதை செய்த வண்ணம் சாகசங்களை காண்பிக்கவுள்ளன. பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் பேச்சாளர் பரிகேடியர் ருவன் வணிகசூரிய தெரிவித்தார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் வருகையைத் தொடர்ந்து பிரதான வைபவம் இன்று காலை ஆரம்பமாகவுள்ளது.
பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரி முப்படைகளின் தளபதிகள்மற்றும் பொலிஸ் மா அதிபரினால் பிரதான மேடைக்கு அழைத்துச் செல்லப்படும் ஜனாதிபதி அவர்கள் மங்கள வாத்திய முழக்கத்திற்கு மத்தியில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து வெற்றிவிழா அணிவகுப்பை வைபவரீதியாக ஆரம்பித்து வைப்பார்.
இதனைத் தொடர்ந்து ஜனாதிபதிக்கு இராணுவ மரியாதை வழங்கும் வகையில் இலங்கை இராணுவத்தின் பீரங்கி படைப்பிரிவினால் 21 மரியாதை பீரங்கி வேட்டுக்கள் தீர்க்கப்படும். இதனைத் தொடர்ந்து ஜனாதிபதி அவர்கள் நாட்டு மக்களுக்கு விஷேட உரை நிகழ்த்தவுள்ளார். அதனைத் தொடர்ந்து வெற்றி விழா அணிவகுப்பு நடைபெறும்.
இராணுவ அணிவகுப்பு
கிளிநொச்சி பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்கவின் தலைமையில் நடைபெறவுள்ள இராணுவ அணிவகுப்பில் பிரிகேடியர் ரணவன்ன இரண்டாவது கட்டளை அதிகாரியாக செயற்படவுள்ளார்.
இராணுவத்தை பிரதிநிதித்துவப்படுத்தி 335 அதிகாரிகளும், 3734 படைவீரர்களும். பங்குகொள்ளவுள்ளதுடன், மனிதாபிமான நடவடிக்கையின் போது பயன்படுத்தப்பட்ட கனரக ஆயுத தாங்கி வாகனங்கள், கவச, சமிக்ஞை, கண்ணிவெடி மீட்பு கருவிகள் பொருத்தப்பட்ட 116 வாகனங்கள் அணிவகுத்து செல்லவுள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய தெரிவித்தார்.
கடற்படை அணிவகுப்பு
கொமடோர் கபில சமரவீ:ர தலைமையில் கடற்படையின் பிரதான அணிவகுப்பில் 125 அதிகாரிகளும் 1189 வீரர்களும் பங்குகொள்ளவுள்ளனர்.
வடக்கு படை பிரிவுக்கு ரியர் அட்மிரல் சரத்திஸாநாயக்கவும். கிழக்கு பிரிவுக்கு ரியர் அட்மிரல் ரோஹான் சமரசிங்கவும் வன்னி பிரிவுக்கு ரியர் அட்மிரல் சிசிர ஜயகொடியும் தலைமைதாங்கவுள்ளனர்.
அணிவகுப்புக்கு மேலதிகமாக கடற்படைக்குச் சொந்தமான சுமார் 40 கப்பல்கள், அதிவேக படகுகள், மாத்தறை கடற்பரப்பில் சாகசங்களுடன் அணிவகுத்துச் செல்லவுள்ளதாகக் கடற்படைப் பேச்சாளர் கொமான்டர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்தார். ஆழ்கடல் ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபடும் ‘சயுர’ ‘சாகர’ ‘சமுதுர’. சக்தி ஆகிய பாரிய கப்பல்களும் அதிவேக டோரா படகுகள் பெருந்தொகையான சிறிய ரக கப்பல்களும் செல்லவுள்ளன.
விமானப்படை அணிவகுப்பு
எயார் கொமடோர் ரவி ஜயசிங்க தலைமையில் நடைபெறவுள்ள விமானப்படை அணிவகுப்பில் 62 அதிகாரிகளும் 1100 வீரர்களும் கலந்து கொள்ளவுள்ளதாக விமானப்படைப் பேச்சாளர் வின் கொமாண்டர் கிஹான் செனவிரட்ன தெரிவித்தார்.
விமானப் படைக்குச் சொந்தமான 35 விமானங்கள், ஹெலிகொப்டர்கள் வானில் சாகசங்களுடன் பறந்து செல்லவுள்ளது. இதில் விமானப்படையின் ஏ. என். 32, வை- 12, எம். ணு 60 பயணிகள் விமானங்களும், எப்-7, கபீர், மிக்- 27 தாக்குதல் விமானங்களும் பெல்- 212, பெல் 412 ரக ஹெலிகொ¡ப்டர்களும் இதில் அடங்கும்.
பொலிஸ் அணிவகுப்பு
பொலிஸ் அணிவகுப்பில் 41 அதிகாரிகளும், 643 பொலிஸாரும் கலந்து கொள்ளவுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
பொலிஸ் வாத்தியக் குழுக்கள், குதிரைப்படை வீரர்களும், பொலிஸ் விஷேட அதிரடிப்படையினரும் பெண் பொலிஸாரும் இதில் அணிவகுத்து செல்லவுள்ளனர்.
சிவில் பாதுகாப்புப் படை அணிவகுப்பு
சிவில் பாதுகாப்பு அணிவகுப்பில் 25 அதிகாரிகள், 578 வீரர்களும் அணிவகுத்துச் செல்லவுள்ளனர். இதில் பல பிரிவினர்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.
அங்கவீனமுற்ற படை வீரர்கள்
மனிதாபிமான நடவடிக்கையின் போது தாய் நாட்டிற்காக அங்கவீனமுற்ற படைவீரர்களும் இந்த அணிவகுப்பில் கலந்து கொள்ளவுள்ளனர். இவர்கள் வாகனங்களிலும், சக்கர நாற்காலிகளிலும் அழைத்துச் செல்லப்படவுள்ளனர்.
பரசூட் சாகசங்கள்
வெற்றி அணிவகுப்புடன் இணைந்ததாக மாத்தறை வான் பரப்பில் முப்படையினரின் பரசூட் சாகசங்களும் இடம்பெறவுள்ளன.
விமானப்படையின் எம். ஐ. -17 ரக ஹெலிகொப்டர் மூலம் சுமார் ஐயாயிரம் ykk அடி உயரத்திலிருந்து சுமார் 21 பேர் குதிக்கவுள்ளனர். இராணுவ, விமானப்படை, கடற்படை வீரர்கள் தேசிக்கொடி உட்பட முப்படைகளின் கொடிகளுடன் வானிலிருந்து குதித்து சாகசங்கள் காண்பிக்கவுள்ளனர்.tk
Published by
![galleface06[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2012/05/galleface061.jpg?w=150&h=94)
![galleface01[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2012/05/galleface011.jpg?w=500&h=329)
![galleface06[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2012/05/galleface061.jpg?w=500&h=314)
Leave a comment