பிரேசில் உலகக்கிண்ணத்திற்கு மக்கள் எதிர்ப்பு : எரிகிறது தலைநகரம்!

brazil– SHM

ரியோ டி ஜெனிரோ: பிரேசிலில் உலககிண்ண காலபந்து போட்டிகளை நடத்துவதற்கான செலவுகளை கண்டித்து சாவொ பவுலோவிலும், ரியோ டி ஜெனிரோவிலும் நடந்த ஆர்ப்பாட்டங்களைக் கலைக்க பொலிஸார் கண்ணீர்புகை பிரயோகம் செய்தனர்.

கற்களை வீசியும், டயர்களை எரித்தும் ஆர்ப்பாட்டக்காரர்கள் போராடினார்கள்.

சமூகத் திட்டங்கள் மற்றும் வீடமைப்பு ஆகியவற்றை புறக்கணித்துவிட்டு, அடுத்த மாதம் நடக்கவிருக்கும் கால்பந்து போட்டிகளுக்காக பில்லியன் கணக்கான டொலர்களை செலவு செய்வதாக அவர்கள் குற்றஞ்சாட்டுகிறார்கள்.

ஏனைய பல நகரங்களிலும் போராட்டங்கள் நடந்தன. ஆசிரியர்கள் மற்றும் அரச பணியாளர்களும் இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.

brazil

Published by

Leave a comment