மட்டக்களப்பு: ஓவ்வொறு வருடமும் மே மாதம் பௌர்ணமி முழு நிலா தினத்தன்று உலகிலுள்ள அனைத்து பௌத்தர்களாலும் கொண்டாப்படும் வெசாக் பண்டிகையை முன்னிட்டு விஷேட வழிபாடு நேற்று புதன்கிழமை மாலை மட்டக்களப்பு மட்டக்களப்பு மங்களராம ரஜமஹா விகாரையில் இடம்பெற்றது.
இங்கு விஷேட வழிபாட்டை மட்டக்களப்பு மங்களராம ரஜமஹா விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்னதேர் நடாத்தி வைத்தார்.
இதன் போது மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸினால் மட்டக்களப்பு மங்களராம ரஜமஹா விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்னதேரரிடம் ஒரு தொகுதி அன்பளிப்புக்கள் வழங்கி வைக்கப்பட்டன.
இவ் விஷேட வழிபாட்டில் கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நந்தன முனசிங்க ,மட்டக்களப்பு –அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் இந்து கருனாரத்ன,மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் எஸ்.பி. மெவன் சில்வா,மட்டக்களப்பு பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் அனுருத்த பண்டார ஹக்மன,வாழைச்சேனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் லால் செனவிரட்ன,மட்டக்களப்பு மாநகர சபையின் ஆணையாளர் உதயகுமார் உட்பட பொலிஸ் அதிகாரிகள்,பொலிஸ் படை ,விமானப்படை மற்றும் கடற்படை ,விஷேட அதிரடிப் படை,இராணுவம் ஆகியவற்றில் கடமையாற்றும் உத்தியோகத்தர்கள்,மட்டக்களப்பு சிவில் சமூக பிரதிநிதிகள்,தமிழ்முஸ்லிம் வர்த்தக பிரமுகர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இந்த வெசாக் பண்டிகை புத்த பெருமான் பிறந்த தினம் மற்றும் புத்த நிலை அடைந்த தினம் மற்றும் இறந்த தினம் ஆகிய மூன்று பிரதான விடயங்களை வைத்து பௌத்தர்களால் கொண்டாப்படும் பண்டிகை என்பது குறிப்பிடத்தக்கது.
Published by



Leave a comment