குவைத்: குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) ஏற்பாடு செய்யும் 9ம் ஆண்டு மாபெரும் இஸ்ராஃ / மிஃராஜ் சிறப்பு நிகழ்ச்சிகள்!
காயல் மவ்லானா அ. அஹ்மத் அப்துல் காதர் மஹ்ழரி ஹழ்ரத் மற்றும் ஆவணப் பட இயக்குநர் ஆளூர் ஷா நவாஸ் சிறப்புரை!!
பேரன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்ம..குவைத் வாழ் தமிழ் மக்களுக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் விண்ணேற்றப் பயண நிகழ்வை எடுத்துரைக்கும் விதமாக குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic),இம்மாதம் (மே 2014) 22, 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் 9ம் ஆண்டு மாபெரும் இஸ்ராஃ / மிஃராஜ் சிறப்பு நிகழ்ச்சிகளை கீழ்க்கண்ட முறையில் ஏற்பாடு செய்துள்ளது இன்ஷா அல்லாஹ்…நிகழ்ச்சிகளின் சிறப்பம்சங்கள்….
- 2 சிறப்பு விருந்தினர்கள்!
- 3 நாட்கள்!
- 4 இடங்கள்!
- சிறப்புப் சொற்பொழிவுகள்!
- இஸ்லாமிய வரலாற்று ஆய்வரங்கம்!
- ‘இறைத்தூதர்கள் வம்சாவளி அட்டவணை (குவைத் அரசு பதிப்பு)’, நூல்கள், DVDக்கள் மற்றும் ஆவணப் படங்கள் வெளியீட்டரங்கம்!
- இந்திய அரசியல் மற்றும் 2014 தேர்தல் அலசல் அரங்கம்!
- சமூக நல்லிணக்க கருத்தரங்கம்!
- ஊடக விழிப்புணர்வு அரங்கம்!
- குவைத், இந்திய மற்றும் இலங்கை அரசாங்க அதிகாரிகளின் வாழ்த்தரங்கம்!
குவைத் வாழ் அறிஞர் பெருமக்களின் சிறப்புக் கருத்தரங்கம்!- பிற அமைப்பு பிரதிநிதிகளின் கருத்துரைகள்!
- பொது அறிவுப் போட்டிகள்!
- அதான் (பாங்கு) போட்டியில் வெற்றி பெற்றோருக்கு பரிசளிப்பு அரங்கம்!
———————————–கருப்பொருள்:அண்ணல் நபியின் விண்ணுலகப் பயணம் – நன்மையே!மண்ணுலகில் வாழும் மானிடருக்கு!———————————–தமிழகத்திலிருந்து வருகை தரும் சிறப்பு விருந்தினர்கள்:மூன் TVன் வரலாற்று நிகழ்ச்சி நாயகர் – பன்னூலாசிரியர் – மவ்லானா மவ்லவீ ஹாஃபிழ் அஷ்-ஷைஃக் அல்ஹாஜ்அ. அஹ்மத் அப்துல் காதர் மஹ்ழரி ஹழ்ரத் அவர்கள்
நிறுவனர், முஅஸ்கருர் ரஹ்மான் மகளிர் அரபுக்கல்லூரி, காயல் பட்டிணம் ஃகதீப், பெரிய ஜும்ஆப் பள்ளிவாசல், காயல் பட்டிணம் மார்க்க சட்ட ஆலோசகர், பை(த்)துல் மால், காயல் பட்டிணம்கவிஞர் – எழுத்தாளர் – ஆவணப் பட இயக்குநர் – பன்னூலாசிரியர் – ஊடகவியலாளர்ஜனாப் ஆளூர் ஷா நவாஸ் அவர்கள்
- துணைப் பொதுச் செயலாளர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, தமிழ்நாடு
———————————–தலைப்புகள்:
இஸ்ராஃ / மிஃராஜ் முழு வரலாறு! இறுதி நபியின் இறுதி நாட்கள்! 2014 இந்திய பாராளுமன்ற தேர்தல் கள அனுபவம்! ஊடகத்துறை: சாதகங்களும், பாதகங்களும்! இன்றைய இந்திய அரசியல் சூழலில் சிறுபான்மையினரின் நிலை! பன்னோக்கு சமூகங்களுக்கிடையில் இஸ்லாமிய வாழ்வியல்! இன்னும் பல….!!மேலதிக விபரங்களுக்கு தயவுசெய்து இணைப்பைப் பார்வையிடவும்.நிகழ்ச்சியின் முழு விபரம் இத்துடன் இணைக்கபட்டுள்ளது.தொடர்ந்து நமது சங்கத்திற்கு ஆதரவு அளித்துக் கொண்டிருக்கும் அனைத்து நல்லுள்ளங்களுக்கும், நமது செய்திகளை தொடர்ந்து வெளியிடும் இணையதளங்கள், இதழ்கள், வலைப்பூக்கள், தொலைக்காட்சிகள் மற்றம் ஊடகங்கள் ஆகியவற்றின் நிர்வாகிகளுக்கும், ஆசிரியர் குழுவினருக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்வதுடன், தொடர்ந்து எங்களின் சேவைகளை செய்திகளாக மக்களிடம் சேர்ப்பிக்குமாறும், குவைத்திற்கு வெளியே வாழும் சகோதரர்கள் குவைத்தில் வசிக்கும் தங்களுக்கு தெரிந்தவர்களிடம் இந்தச் செய்தியை எத்தி வைக்குமாறும், நம் சங்கத்தின் பணிகள் மென்மேலும் விரிவடைய தங்களின் இருகரமேந்திய பிரார்ததனைகளை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அன்பு வேண்டுகோள் விடுக்கின்றனர் K-Tic சங்க நிர்வாகிகள்.——————————————————————————————————-தகவல் தொடர்பு & ஊடகப் பிரிவு,
குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic),
குவைத்.
Published by


Leave a comment