வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ஒபாமாவைக் கொலை செய்வதற்காக 75 வயது பாட்டியைக் கொலை செய்து காரை திருடிய குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்கப் பட்டுள்ளது. கடந்த 2011ம் ஆண்டு வாஷிங்டனில் இருந்த அதிபர் ஒபாமா மீது காரை ஏற்றிக் கொல்ல திட்டமிட்டதாக மேக்வே (44) என்ற நபர் கைது செய்யப்பட்டார்.
தாக்குதலுக்குப் பயன் படுத்துவதற்காக அவர் மேபல் என்ற 75 வயது பெண்மணியை குத்திக் கொலை செய்து அவரது காரை திருடி வந்தது விசாரணையில் தெரிய வந்தது. அவரிடமிருந்து திருடப்பட்ட கார் கைப்பற்றப் பட்டது.
இது தொடர்பான வழக்கு அமெரிக்க நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கு விசாரணையின் போது, தனது தவறை ஒப்புக் கொண்டார் மேக்வே. தனது வாக்குமூலத்தில் அதிபர் ஒபாமைக் கொல்ல கார் தேவைப் பட்டதால் அப்பெண்மணியை அவர் கொலை செய்ததாக கூறியிருந்தார்.
அதனைத் தொடர்ந்து , விசாரணை முடிந்த நிலையில் குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.
Published by

Leave a comment