கொழும்பு: இலங்கையில் முதன்முறையாக செய்மதி மூலமான மும்மொழி தொலைக்காட்சி சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது. கடந்த 30 வருட கால போரின் பின்னர் இலங்கை பெற்றுள்ள பொருளாதார மற்றும் சமூக இலக்குகளை உலகுக்கு அறிவிக்கும் வகையில் இந்த தொலைக்காட்சி சேவை ஒளிபரப்புகளை மேற்கொள்ளவிருக்கிறது.
செய்திகள் நடைமுறை விடயங்கள் நாடகங்கள் இசை நிகழ்ச்சிகள் இளைஞர் மற்றும் விளையாட்டு நிகழ்ச்சிகள் இதில் ஒளிபரப்பாகவுள்ளன.
‘தெனித டிவி’ என்ற பெயரில் இந்த தொலைக்காட்சி செயற்படவுள்ளது
இலங்கையில் இருந்து ஒளிபரப்பாகும் இந்த தொலைக்காட்சி சேவை ஆசியா ஐரோப்பியா மத்தியகிழக்கு மற்றும் அவுஸ்திரேலிய என்று 116 நாடுகளில் பார்க்கக்கூடியதாக இருக்கும்.
புலம்பெயர்ந்துள்ள இலங்கையர்களுக்கு இலங்கையின் நிகழ்வுகளை தமிழ் சிங்களம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் இந்த சேவை வழங்கவுள்ளது
Published by
![cableTV[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/03/cabletv1.jpg?w=150&h=150)
Leave a comment