தம்புள்ள பள்ளி விவகாரம்: மத விவகார விசேட பொலிஸார் நேரில் சென்று விசாரணை

Dambulla-mosque[1]தம்புள்ள: தம்புள்ள ஜும்ஆபள்ளி வாசல் தொடர்பாக மத விவகாரங்களுக்கான விசேட பொலிஸ் பிரிவில் செய்யப்பட்ட முறைப்பாட்டையடுத்து அப்பிரதேசத்துக்கு பொலிஸ் பிரிவின் மூன்று உயரதிகாரிகள் சென்று விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

திங்கட்கிழமை (12) கொழும்பிலிருந்து தம்புள்ளைக்கு வருகை தந்த மதவிவகாரங்களுக்கான விசேட பொலிஸ் பிரிவின் மூன்று உயரதிகாரிகள் தம்புள்ள ஜும்ஆப் பள்ளி நிர்வாகிகளுடன் கலந்துரையாடி வாக்கு மூலங்களைப் பதிவு செய்து கொண்டதாக பள்ளி நிர்வாகம் தெரிவித்தது. அவ்வேளையில் தம்புள்ள ஜும்ஆப் பள்ளி முன்றலில் புதிய மளுவப் பாதையை முன்னோக்கியவாறு பள்ளிக்குப் பாதுகாப்பு வழங்கிக் கொண்டிருந்த ஆறு பொலிஸ் உத்தியோகத்தர்களிடமும் இவ்வதிகாரிகள் வாக்கு மூலங்களைப் பெற்றுக் கொண்டதாகவும் கூறப்படுகின்றது.

பள்ளி வளாகத்தைச் சுற்றிப் பார்வையிட்ட அவ்விசேட பொலிஸ் குழுவினர் பின்னர் பள்ளிக்கு முன்புறமும், பின்புறமுமாக மேற்கொள்ளப்பட்டிருந்த பாதைப் புனரமைப்புப் பணிகளையும் பணிகள் இடை நிறுத்தப்பட்டிருந்த பிரதேசங்களையும் பல்வேறு கோணங்களில் புகைப்படம் எடுத்துக் கொண்டதாகவும் நிர்வாகம் தெரிவித்தது.

இதேவேளை, தம்புள்ள பொலிஸ் நிலையத்திற்குச் சென்ற அக்குழுவினர் அங்கு பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி உள்ளிட்ட பொலிஸ் அதிகாரிகளுடன் நீண்ட நேரம் கலந்துரையாடி அவர்களது கருத்துகளைப் பதிவு செய்ததுடன், மேலதிக விசாரணைகளின் பொருட்டு அவ்வதிகாரிகளை கொழும்பு விசேட பொலிஸ் பிரிவின் தலைமையகத்திற்கு சமுகமளிக்குமாறு கோரிக்கை விடுத்துச் சென்றதாகவும் தம்புள்ள பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. tk

Published by

Leave a comment