சவுதியில் கார் ஓட்டியதற்காக மனைவியை விவாகரத்து செய்த கணவர்

saudi-arabia-driving-women-ban-demonstration-warning_10-25-2013_123733_l[1]– SHM

றியாத்: சவுதியில் கார் ஓட்டியதற்காக மனைவியை ஒருவர் விவாகரத்து செய்துள்ளார்.சவுதி அரேபியாவில் பெண்களுக்கு பல கட்டுப்பாடுகள் உள்ளன. அதில் ஒன்று பெண்கள் வாகனம் ஓட்ட தடை. இந்நிலையில் சவுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் கார் ஓட்டி அதை வீடியோ எடுத்து ‘வட்ஸ்அப்’ மூலம் தனது கணவருக்கு அனுப்பியுள்ளார். கணவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்க நினைத்து அவர் அந்த வீடியோவை அனுப்பியுள்ளார்.

ஆனால் வீடியோவை பார்த்த அந்த பெண்ணின் கணவர் ஆத்திரப்பட்டு அவரை விவாகரத்து செய்துவிட்டார். இது குறித்து அந்த பெண்ணின் கணவர் விவாகரத்து கோரி விண்ணப்பித்த நீதிமன்றத்தில் கூறுகையில்இவீடியோவை பார்த்து நான் என் மனைவியை அடிக்கவில்லை. விவாகரத்து முடிவாகும் வரை உன் தாய் வீட்டில் இரு என்று கூறி அனுப்பிவிட்டேன்.

அவர் என்னிடம் கூறாமல் கார் ஓட்டியுள்ளார். அவர் கார் ஓட்டியதன் மூலம் சவுதி நாட்டு சட்டத்தை அவமதித்துவிட்டார். அதனால் தான் அவரை விவாகரத்து செய்ய முடிவு செய்தேன் என்றார்.சவுதி சட்டம் தெரிந்தும் சில பெண்கள் துணிச்சலுடன் பொது இடங்களில் கார் ஓட்டுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.வாகன ஓட்டுதலில் அதிக ஆர்வம் காட்டி வருவதாகன தெரியவருகிறது.

இதற்கு முக்கிய காரணம், மேலத்தேய கல்வி, கலாச்சாரங்களில் ஈர்க்கப்பட்டு அங்கு சென்றுவரும் இவ்வாறான பெண்கள் இத்தகைய வாகன ஓட்டுதல்களில் அதிகூடிய ஆர்வம் எடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

 

Published by

Leave a comment