கிண்ணியா: கிண்ணியா பிரதேசத்தில் டெங்கு நோய் வேகமாக பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது. இதுவரை சுமார் 80 பேர் வரை டெங்க நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார வைத்திய அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தினதும் உள்ளூராட்சி அலுவலகத்தினதும் அறிவுறுத்தலுக்கு அமைவாகவும் பிரதேசத்தினை சுத்தமாக வைத்திருக்கும் நோக்குடனும் கிண்ணியா நகரசபை நகரபிதா டொக்டர் ஹில்மி மஹ்ரூப் தலைமையில் சிரமதானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.
கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்துடன் இணைந்து நுளம்புப் பெருக்கத்தினை கட்டுப்படுத்தும் நோக்குடன் முன்னெடுத்துவரும் வேலைத்திட்டத்திற்கு அமைவாக கிண்ணியா நகரசபைக்குட்பட்ட அநேகமான இடங்கள் அடிக்கடி சிரமதானத்தின் மூலமாக துப்புறவு செய்யப்பட்டுகிறமை குறிப்பிடத்தக்கது.
இன்று கிண்ணியா அகமட் லேன் பிரதேசம் சிரமானத்தின் மூலம் துப்புறவு செய்யப்பட்டது. இந்நிகழ்வில் கிண்ணியா நகரசபை, சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம், கிண்ணியா பிரசேத செயலகம், பொலிஸ், படை வீரர்கள் மற்றும் சமூக நலன்விரும்பிகளும் கலந்து கொண்டு தத்தமது பங்களிப்புக்களை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Published by



Leave a comment