இடிமின்னல் ஆபத்தில் இருந்து பாதுகாப்புப் பெறும் வழிமுறைகள்

4LEE_Lightning-md[1]உலகம் இன்று இயற்கை சமநிலை பாதிக்கப்பட்டு ஆங்காங்கே பல்வேறுபட்ட இயற்கை அனர்த்தங்கள் சர்வசாதாரணமாக இடம்பெற்று வருகின்றன. இவ்வாறான அனர்த்தங்களில் இருந்து உயிர்களையும் உடைமைகளையும் பாதுகாக்கும் செயற்பாடுகளை இன்று இலங்கை உட்பட பல்வேறு நாடுகள் முன்னெடுத்து வருகின்றன.

அனர்த்தம் என்பது புவி தோற்றம் பெற்ற காலம் தொட்டு இன்று வரை இடம்பெற்று வருகின்ற சாதாரண நிகழ்வாக இருந்தாலும் நாம் வாழும் சூழலும் உயிர்களும் பாதிக்கப்படும் வீதம் அதிகரித்து செல்லச் செல்ல அனர்த்தங்கள் மீது மனிதன் அச்சம் கொள்கிறான். அவற்றின் தாக்கங்களில் இருந்து பாதுகாப்பினை தேடிக்கொள்ளும் முயற்சியில் தற்போது மிகத் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றான்.

இவ்வாறு உயிர்கள் துன்பப்படுவதற்கு மனித நடவடிக்கைகளும் காரணமா கின்றன. மனிதன் இயற்கையை சீர்குலைத்து சூழலைப் பாதுகாக்காமல் மாசுபடுத் தியமையால் இயற்கை சமநிலையை இழந்து அதன் விளைவாக அனர்த்தங்கள் தோன்றுகின்றன. இது யாராலும் மறுக்க முடியாத உண்மையாக இருந்த போதிலும் இன்றைய விஞ்ஞான யுகத்தில் இவற்றைத் தவிர்க்க முடியாது.

ஆனால் அவதானமாக தயார் நிலையில் விழிப்பாக இருப்பதன் மூலம் பெரும் அழிவுகளில் இருந்து உயிர்களையும், உடைமைகளையும் பாதுகாத்துக்கொள்ள முடியும்.

இலங்கையைப் பொறுத்தவரை மார்ச் மாதம் தொடக்கம் மே மாதம் வரையான காலப் பகுதியிலும். செப்டம்பர் தொடக்கம் ஒக்டோபர் வரையான காலங்களிலும் இடி மின்னல் தாக்கம் அதிகமாக காணப்படுகின்றது.

இயற்கை அனர்த்தங்களில் இடி மின்னல் தாக்கம் அதிகமான சேதங்களை ஏற்படுத்துகின்றது. இடி மின்னல் தாக்கம் காரணமாக வருடாந்தம் சுமார் 2000 க்கு மேற்பட்ட மக்கள் உலகில் பாதிக்கப் படுவதாக ஆய்வுகள் மூலமாக தெரிய வருகின்றது. இடி மின்னல் தாக்கமானது மூன்று வழிகளில் தாக்கம் ஏற்படுத்துவதாக ஆய்வுகள் கூறுகின்றன.

01) புவி இடி மின்னல்: இது முகில் கீழ் பகுதியில் இருந்து புவிக்கு வருதல்.

02)முகில் இடி மின்னல்: இது முகில்களுக்கு இடையில் ஏற்படுவது

03)காற்று இடி மின்னல்: இது முகில்களுக்கும் அண்டவெளிக்கும் இடையில் ஏற்படுவது.

இவற்றுள் புவி இடி மின்னல் தான் அதிகளவு தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இதன் காரணமாகத் தான் அதிக பாதிப்புக்களை விலங்குகளும்இ மனிதர்களும் எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

பரந்த வெட்ட வெளி யான சமநிலப்பரப்பில் அதிக தாக்கம் காணப்படக் கூடியதாக இருக்கின்றது. காரணம் பரந்த வெட்ட வெளியில் மனிதர்கள் மற்றும் விலங்குகள் நிலத்தில் இருந்து உயர மாக நிற்கின்றபோது மின்னல் நேரடியாக தாக்குகின்ற சந்தர்ப்பம் காணப்படும். உயரமான மரங்களின் கீழ் இருத்தல் கூடாது.

அதுவும் ஆபத்தை ஏற்படுத்தக் கூடியது. மரத்தில் விழும் இடி மின்னல் நேரடியாக மர வேர்களின் ஊடாக தரைக்கு கடத்தப்படும். அப்போது அங்கு நாம் இருப்போமானால் மின்னல் தாக்கம் எம்மை யும் தாக்கக் கூடும். எனவே இடி மின்னல் நேரங்களில் உயரம் கூடிய பரந்த மரங்களின் கீழ் நிற்பதைத் தவிர்த்துக்கொள்ளல் வேண்டும்.

அடுத்த இடி மின்னல் நேரங்களில் நாம் பரந்த சமவெளியில் நடமாடும்போது நாம் அணிந்துள்ள தோடுகள் மற்றும் சில ஆபரணங்களிலும் மின்னல் தாக்கம் ஏற்பட சந்தர்ப்பம் உண்டு.

அத்துடன் வயல் வெளிகளில் வேலை செய்யும்போது நாம் பயன்படுத்தும் மண்வெட்டி மற்றும் நாம் பிடித்துச் செல்லும் குடைக் காம்பின் மேற் கூம்பு போன்றவற்றிலும் கூடியளவு மின்னல் தாக்கும் சந்தர்ப்பம் உண்டு. மேலும் இடி இமின்னல் நேரங்களில் கடல் மற்றும் களப்புகளில் மீன் பிடிக்கும் சந்தர்ப்பங்களில் இடி மின்னல் தாக்கும் சந்தர்ப்பம் உண்டு. காரணம் வலையில் உள்ள ஈயத்துக்கு இடி மின்னலை ஈர்க்கக் கூடிய சக்தி உண்டு. எனவே இவ்வாறான சந்தர்ப்பங்களில் மீன்பிடிப்பதில் ஈடுபடுவதை தவிர்த்தல் வேண்டும்.

அத்துடன் இடி மின்னல காலங்களில் திறந்த வாகனங்களில் பிரயாணம் செய்வதை தவிர்த்துக் கொள்வது நன்று. அதாவது மோட்டார் சைக்கிள், துவிச்சக்கர வண்டி. உழவு இயந்திரம், மாட்டு வண்டி மற்றும் நீர் நிலைகளில் தோணியில் பயணித்தல், மீன் பிடித்தல் போன்றன தவிர்க்கப்பட வேண்டும். காரணம் விமா னம் மற்றும் மூடிய வாகனங்களில் காணப்படும் பரமென்ட்டையில்ஸ் எனும் வடிவமைப்பு முறை திறந்த வாகன அமைப்பில் காணப்படுவதில்லை. எனவே இடி மின்னல் காலங்களில் திறந்த வாகனங்களில் பயணிப்பதை தவிர்க்க வேண்டும்.

அடுத்து வீடுகளில் இடி மின்னல் காலங்களில் மின்சார சாதனங்களின் பாவனைகளை நிறுத்தி மின்சார தொடர்பு இணைப்புடனான வயர்களை துண்டித் துவிட வேண்டும். காரணம் சில வீடுகளில் மின்னலைத் தாங்கும் தரைகீழ் கம்பிகளைக் கட்டிடங்களுக்கு பொருத்தாமல் சிலர் இருப்பர். இதனைக் கருத்தில் கொண்டு பொதுவாக இடி மின்னல் காலங்களில் மின்சாரப் பாவனைகளை நிறுத்தி வைத்தல் பாதுகாப்பான முறையாகும். மிக முக்கியமாக தொலைக்காட்சிப் பெட்டிகள்.

தொலைபேசிகள் பாவனை போன்றன கட்டாயமாக தவிர்க்கப்பட வேண்டும். குறிப்பாக் நாம் நமது வீடுகளில் மின் இணைப்புக்களை மேற்கொள்ளும்போது மின்னலைத் தாங்கும் தரைக்கீழ் கம்பிகளை (ஏத் வயர்) அமைக்க வேண்டும்.

இடி மின்னல் தாக்கங்களில் இருந்து பாதுகாக்கும் தற்காப்பு முறைகளை நாம் தெரிந்துகொள்வது அவசியம். சமதரையில் நாம் நடமாடும் சந்தர்ப்பத்தில் இடிமின்னல் தாக்கம் ஏற்படுமானால் கால்கள் இரண்டையும் நெருக்கமாக அனைத்து கால்களை மடக்கி நிலத்தில் மண்டியிட்டுக்கொண்டு கைகள் இரண்டினையும் தலையின் பின்பிடரியில் வைத்து தலையை நன்றாக குனிந்தபடி இருக்க வேண்டும்.

காரணம் நாம் நிமிர்ந்து இரண்டு கால்களையும் விரித்து கம்பீரமாக நிற்கும்போது அந்த பகுதியில் நாம் தனியான உயரமாக காணப்படும் சந்தர்ப்பத்தில் எமது தலைப்பகுதியை நோக்கி இடி மின்னல் தாக்கும் சந்தர்ப்பம் அதிகமாக இருக்கும். குறிப்பாக நிலத்தில் கால்களை விரித்து படுப்பதும் நிற்பதும் ஆபத்தானவையாகும். முடிந்தளவு பூமியுடன் எமது உடல் அபயங்களின் தொடர்பை குறைத்துக்கொள்வது எமக்கு பாதுகாப்பாக அமையும்.

அடுத்து வீதியால் பயணிக்கும் சந்தர்ப்பத்தில் தொலைத் தொடர்பு கோபுரங்களில் கீழும் தற்காப்புக்காக நாம் ஒதுங்கி இருக்க முடியும். அதாவது தொலைத் தொடர்பு கோபுரங்களில் இருந்து சுமார் 45 பாகை இறக்க கோணத்தில் கீழ் உள்ள இடங்களில் இடி மின்னல் தாக்கம் இல்லை. காரணம் தொலைத் தொடர்பு கோபுரங்களில் உள்ள இடி தாங்கி மின்னலை ஏற்று அதனில் பொருத்தப்பட்டுள்ள வயரின் மூலமாக மின்னலை (மின்சாரம்) நிலத்திற்கு கடத்திவிடுகின்றது.

ஆனால் குறிப்பாக தொலைத் தொடர்பு கோபுரங்களில் இருந்து சற்று தூரத்தில் தான் நாம் இருக்க வேண்டும். காரணம் தொலைத் தொடர்பு கோபுரங்களில் பொருத்தப்பட்டுள்ள இரும்பு கம்பிகள் எமது உடல் அவயங்களில் தொடுகை உள்ளவாறு இருக்கக் கூடாது. இரும்பு கம்பிகள் எமது உடல் அவயங்களுடன் தொடுகையில் இருக்குமானால் அந்த சந்தர்ப்பத்தில் கம்பிகள் மூலம் கடத்தப்படும் மின்னல் (மின்சாரம்) நம்மை தாக்கி விடும். எனவே அவதானமாகவும் பாதுகாப்பாகவும் எமது இருப்பிடத்தை உறுதி செய்து கொள்ளல் வேண்டும்.

குறிப்பாக திறந்த வெளியிடங்களில் நிற்பதைத் தவிர்த்தல், தொலைத் தொடர்புகளை துண்டித்தல். உயர் மரங்களின் கீழ் நிற்பதை தவிர்த்தல். உலோகத் தளபாடங்களை பயன்படுத்து வதை தவிர்த்தல், திறந்த வாகனங்களில் பயணித்தலைத் தவிர்த்தல் மின் உபகரணங்களைப் பயன்படுத்துவதை தவிர்த்தல் போன்ற பாதுகாப்பு வழிமுறைகளை கூடியளவு கடைப்பிடிப்பது இடி மின்னல் தாக்கத்தில் இருந்து எம்மையம் எமது உடைமைகளையும் பாதுகாத்துக்கொள்ள வேண்டும். பெரும் மின் சக்தியை மின்னல் கொண்டுள்ளது. என்பது குறிப்பிடத்தக்கது.

உலகில் உள்ள நாடுகளில் சிங்கப்பூர் இடி மின்னல் தாக்கத்தினால் அதிகம் பாதிக்கப்படும் நாடாக கூறப்படுகின்றது. நமது நாட்டிலும் இடி மின்னல் தாக்கம் தொடர்ச்சியாக பாதிப்புக்களை ஏற்படுத்தி வருகின்றது.

அத்துடன் உயிரிழப்புக்களும் ஏற்படுகின்றன. இலங்கையில் அனுராதபுரம். பொலன்னறுவை மற்றும் கரையோரப் பிரதேசங்கள் உட்பட நாடு பூராகவும் ஆங்காங்கே இடி மின்னல் தாக்கங்கள் இடம்பெற்று வருவதை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது.TK

Published by

Leave a comment