கிண்ணியா: உயிருக்கு அச்சுறுத்தலாக நாட்டில் வேகமாக பரவிவரும் டெங்கு நோயினை கட்டுப்படுத்தும் நோக்குடன் அரசாங்கம் முன்னெடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு இசைவாக கிண்ணியா நகரசபையும் பங்களிப்புக்களை வழங்கி வருகின்றது. துற்போதைய கணக்கெடுப்பின் பிரகாரம் கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் குறிப்பிடும் போது கிண்ணியாவில் டெங்கு நோயியின் தொற்றுக்கு உள்ளாகி வருவதாகவும் கிட்டத்தட்ட 80 பேர் வரை தற்போது பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
கிண்ணியா நகரசபையும் டெங்கு ஒழிப்புக்கான சகல நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வரும் நிலையில் நேற்றும் கிண்ணியா நகரசபை நகரபிதா டொக்டர் ஹில்மி மஹ்ரூப் தலைமையில் டெங்கொழிப்ப நடவடிக்கையாக நகரசபைக்குட்பட்ட பல பகுதிகளில் சிரமதானம் மற்றும் வீட்டுச் சுற்றுப்புறச் சூழல் போன்றவற்றை பரிசோதிக்கும் நிகழ்வு இடம்பெற்றது.
இதில் கிண்ணியா நகரசபை, கிண்ணியா பிரசேத செயலகம், சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம், பொலிஸ், படை வீரர்கள் மற்றும் சமூக நலன்விரும்பிகளும் கலந்து கொண்டு பங்களிப்புக்களை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Published by



Leave a comment