60,000 பெளத்த கொடிகள் அதிகார சபையால் பறிமுதல்

flagகொழும்பு: பெளத்த கொடியினை அகெளரவப்படுத்தும் வகையில் பிழையான நிறங்களுடன் அச்சிடப்பட்ட 60,000 பெளத்த கொடிகளை நுகர்வோர் அதிகார சபையினர் பறிமுதல் செய்துள்ளனர். புறக்கோட்டை பீப்பிள்ஸ் பார்க் பகுதியில் விற்பனைக்குத் தயாராகவிருந்த 60,000 கொடிகளே இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

நீலம், மஞ்சள், செம்மஞ்சள், சிவப்பு மற்றும் வெள்ளை ஆகிய நிறங்களைக் கொண்ட பெளத்த கொடியில் நிறங்கள் உரிய முறையில் பொருத்தப்படாமல் முழுவதும் பிழையான வகையில் வர்ணங்கள் பொருத்தப்பட்டு கொடிகள் அச்சிடப்பட்டிருப்பதாக நுகர்வோர் அதிகாரசபை தெரிவித்துள்ளது.

ஒரு அடி மற்றும் இரண்டு அடிகளைக் கொண்ட இந்தக் கொடிகள் துணி மற்றும் தாள்களில் அச்சிடப்பட்டிருந்ததாகவும், இவற்றை அச்சிட்டவர்கள் மற்றும் விற்பனை செய்ய முற்பட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவிருப்பதாகவும் நுகர்வோர் அதிகாரசபை மேலும் அறிவித் துள்ளது.

இவ்வாறு பிழையாக அச்சிடப்பட்ட கொடிகள் ஏற்கனவே சந்தைக்கு அனுப்பப்பட்டிருப்பதால் வெசாக் காலத்தில் பெளத்த கொடிகளை வாங்கும் மக்கள் அவதானமாக இருக்குமாறு கூட்டுறவு மற்றும் உள்நாட்டு வர்த்தகத்துறை அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கேட்டுக்கொண்டுள்ளார்.

Published by

Leave a comment