காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமா சபையின் ஏற்பாட்டில்  மட்டக்களப்பு மாவட்ட கதீப்மார்களுக்கான மூன்று நாள் வதிவிடக்கருத்தரங்கு

jammia– பழுலுல்லாஹ் பர்ஹான்

காத்தான்குடி: அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் கீழ் இயங்கும் காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமா சபையின் தஃவா பிரிவின் ஏற்பாட்டில் (ஜம்மியதுஷ் ஷபாப் ) அகில இலங்கை முஸ்லிம் வாலிபர் ஒன்றியத்தின் அனுசரனையுடன் மட்டக்களப்பு மாவட்ட கதீப்மார்களுக்கான மூன்று நாள் வதிவிடக்கருத்தரங்குக்கான அங்குரார்ப்பண வைபவம் 10-04-2014 இன்று சனிக்கிழமை மட்டக்களப்பு சத்துருக் கொண்டான் சர்வோதய பயிற்சி நிலையத்தில் இடம்பெற்றது.

காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமா சபையின் செயலாளர் அஷ்ஷேய்க் எம்.எச்.ஜிப்ரி மதனி தலைமையில் இடம்பெற்ற இவ் வைபவத்தில் அகில இலங்கை முஸ்லிம் வாலிபர் ஒன்றியத்தின் திட்டப் பணிப்பாளர் ஸபருஸ் ஸாலிஹ், சிரேஷ்ட விரிவுரையாளரும்,முன்னாள் ஜம்மியதுஷ் ஷபாப் நிறுவனத்தின் பணிப்பாளர் அங்கத்தவர்களில் ஒருவரான உஸ்தாத் இஸ்மாயில் ஏ.அஸீஸ்,காத்தான்குடி ஜம்மியதுல் உலமா சபையின் ஆயூட்காலத் தலைவர் மௌலவி முஸ்தபா (பஹ்ஜி), அதன் நிர்வாக செயலாளர் அஷ்ஷெய்க் அமானி நளீமி,காத்தான்குடி ஜாமியதுல் பலாஹ் அறபுக்கல்லூரியின் விரிவுரையாளர் மௌலவி அமீன் (பலாஹி),சர்வோதயத்தின் கிழக்கு மாகாண இணைப்பாளர் கரீம்,அஷ்ஷேய்க் பஷீர் மதனி ஊடகவியலாளர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

09-05-2014 நேற்று வெள்ளிக்கிழமை மாலை ஆரம்பிக்கப்பட்ட கதீப்மார்களுக்கான இவ் மூன்று நாள் வதிவிடக்கருத்தரங்கு 11-05-2014 நாளை ஞாயிற்றுக்கிழமை மாலை நிறைவு பெறும்.

இக் கருத்தரங்கில் மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடி, ஏறாவூர், ஓட்டமாவடி பிரதேசத்தைச் சேர்ந்த உலமாக்கள் பங்குபற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

jammia

jammiah1

Published by

Leave a comment