மட்டக்களப்பு: இலங்கை அரசாங்கத்தினால் வெளிநாடுகளுக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள் குழு 10-05-2014 இன்று சனிக்கிழமை மட்டக்களப்பு மாவட்டத்துக்கு விஜயம் செய்தனர்.
மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டு மாவட்ட செயலகத்துக்கு வருகைதந்த தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள் குழுவை மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.பி.எஸ்.எம்.சார்ள்ஸ் வரவேற்றார்.
அதனைத்தொடர்ந்து மட்டு அரச அதிபரின் காரியாலயத்தில் இடம்பெற்ற சந்திப்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் தூதுக்குழுவினருக்கு மாவட்ட அரச அதிபரினால் விளக்கமளிக்கப்பட்டது.
இதன் போது மட்டக்களப்பு மாவட்டத்தின் தற்போதைய நிலை ,மீள்குடியேற்ற நடவடிக்கைகள் போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
இதில் சவூதி அரேபியா, ஆப்கானிஸ்தான் ,பிலிப்பைன்ஸ், போன்ற பல்வேறு நாடுகளுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் புதிதாக நியமிக்கப்பட்ட தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள் குழுவே இவ் விஜயத்தினை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Published by



Leave a comment