காபுல்: ஆப்கானிஸ்தானில் உள்ள தலிபான்கள் முகாம் ஒன்றில் வேற்று கிரக விமானம் ஒன்று தாக்குதல் நடத்தியதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.ஆப்கானிஸ்தானில் உள்ள நேட்டோ படைகள் வெளியேறிக் கொண்டிருக்கின்றன.
இந்த ஆண்டு இறுதியில் நேட்டோ படைகள் முழுவதுமாக ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறிவிடும் என்று கூறப்படுகிறது.தலிபான்கள் அட்டூழியம் செய்யும் ஆப்கானிஸ்தானில் தற்போது புதுப் பிரச்சனை ஏற்பட்டுள்ளது என்கிறது அமெரிக்கா.
ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க படை வீரர்கள் கடந்த மார்ச் மாதம் ஒரு வித்தியாசமான காட்சியை வீடியோ எடுத்துள்ளனர்.
அமெரிக்க வீரர்கள் பார்த்துக் கொண்டிருக்கையில் ஏதோ ஒரு வகையான விமானம் தாலிபான்கள் முகாம் மேலே பறக்கிறது.
முக்கோண வடிவில் இருக்கும் அந்த விமானம் என்னவென்று பார்க்கும் முன்பு அதில் இருந்து சத்தமின்றி வெளிச்சம் மட்டும் வருகிறது
வெளிச்சம் வந்த உடன் தாலிபான்கள் முகாமில் பயங்கர சத்தத்துடன் குண்டுகள் வெடிக்கின்றன. இதையடுத்து அந்த பகுதி புகை மண்டலமாக மாறுகிறது.
புகை அடங்கிய பிறகு அமெரிக்க வீரர்கள் அந்த விமானத்தை வீடியோ எடுத்துள்ளனர். அந்த விமானம் வேற்று கிரகத்தில் இருந்து வந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இது நம்ப முடியாத தகவல் எனவும் அமெரிக்கா பொய் கூறுவதாகவும் ஊடகங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
Published by


Leave a comment