ஒலுவில்: ஒலுவில் தென்கிழக்குப் பல்க லைக்கழகத்தில் அஷ்ரஃப் ஞாபகார்த்த நூலகம் ரூபா 200 மில்லியன் செலவில் புதிதாக நிர் மாணிக்கப்பட்டு அண்மையில் திறந்து வைக்கப்பட்டது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு இதனைத் திறந்து வைத்தார்.
தென்கிழக்குப் பல்கலைக்கழக வரலாற்றில் இது முக்கிய வரலாற்றுப் பதிவாகும்.
1995 ஆம் ஆண்டு பல்கலைக்கழகக் கல்லூரியாக அட்டாளைச்சேனை ஆசி ரியர் பயிற்சிக் கலாசாலை கட்டடத் தொகுதியில் ஆரம்பித்து வைக்கப்பட்ட போது ஒரு சிறிய அறையில் சுமார் 2000 புத்தகங்களுடன் ஆரம்பிக்கப்பட்ட நூலகம் இன்று இலங்கைப் பல்க லைக்கழக நூலகங்களில் குறிப்பிடத் தக்கதொன்றாக வளர்ச்சி கண்டுள்ளமை பாராட்டுக்குரியது.
தென்கிழக்குப் பல்கலைக்கழகம் அதன் தற்போதைய நிரந்தர அமை விடமான ஒலுவிலுக்கு இடம் மாறிய பின்னர் அங்குள்ள நெற்களஞ்சிய சாலை நூலகக் கட்டடமாக மாற்றப்பட்டு சிறப்பாக இயங்கி மாணவர் தேவையை நிறைவுசெய்து வந்தது. தற்பொழுது நீண்டகாலத் தேவையான நூலகக் கட்டடத் தொகுதியை பூர்த்தி செய்துள் ளமையானது மகிழ்ச்சிக்குரிய விடயமாகும்.
பல்கலைக்கழக பிரதான நுழைவாயி லினூடாக உள் நுழையும் போது மிகவும் கம்பீரமாகவும் இரம்மியமாகவும் காட்சியளித்து மனதை கொள்ளை கொள்கின்றது புதிய நூலகக் கட்டடம். 50120 சதுர அடி பரப்பளவு கொண்ட இரு மாடி நூலகக் கட்டட நிர்மா ணத்திற்கான நிதியை அரசாங்கம் வழங்கியுள்ளது.
புதிய நூலகக் கட்டடத்திற்கு ‘அஷ்ரஃப் ஞாபகார்த்த நூலகம்’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது. மறைந்த அமைச்சரும் தென்கிழக்குப் பல்கலைக்கழக ஸ்தாப கருமான எம். எச். எம். அஷ்ரபின் பெயர் சூட்டப்பட வேண்டுமென உபவேந்தர் கலாநிதி எஸ். எம். எம். இஸ்மாயில் பல்கலைக்கழக மூதவையிடம் விடுத்த வேண்டுகோளையடுத்து இப்பெயர் சூட்டப்பட்டது.
இதன்மூலம் தென்கிழக்குப் பல்கலைக் கழகம் மறைந்த அமைச்சர் எம். எச். எம். அஷ்ரஃபிற்கு கெளரவம் வழங் கியுள்ளதுடன். அன்னாரை ஞாபகப் படுத்தவும் வாய்ப்பளித்துள்ளது. அந்த வகையில் உபவேந்தர் கலாநிதி எஸ். எம். எம். இஸ்மாயிலின் பணியை பாராட்டாமலிருக்க முடியாது. இதன் மூலம் உபவேந்தர் இஸ்மாயிலின் நாமமும் சமூகத்தில் மறக்கப்பட முடி யாத ஒன்றாக மாறியுள்ளமை தெளிவாகும்.
அஷ்ரஃப் ஞாபகார்த்த நூலகம் 01 இலட்சத்து 20 ஆயிரம் நூல்களையும் 1200 டி. வி. டி. க்களையும் 275 கல்விசார் பருவ வெளியீடுகளையும் பல்வேறு புலமைசார் தரவுத் தளங்க¨ளுயம் மேலும் பல விசேட அரிய சேகரிப் புக்களையும் கொண்டு மிளிர்கின்றது. ஒரே நேரத்தில் 400 மாணவர்கள் உஷாத்துணை செய்வதற்கேற்றவகையில் 400 இருக்கைகளைக் கொண்டுள்ளமை நூலகத்தின் மற்றுமொரு சிறப்பம்சமாகும்.
நூலகக் கட்டடம் வைபவ ரீதியாகத் திறந்து வைக்கப்பட்ட தினத்தன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நூலக அங்கத்தவராக சேர்த்துக் கொள் ளப்பட்டதுடன் நூலகர் எம். எம். றிபாவுத்தீனிடமிருந்து ஜனாதிபதி முதல் நூலையும் பெற்றுக் கொண்டார். ஜனாதிபதியைத் தொடர்ந்து உயர் கல்வி அமைச்சர் எஸ். பி. திஸாநாயக்கஇ உப வேந்தர் எஸ். எம். எம். இஸ்மாயில் ஆகியோரும் அங்கத்தினர்களாக சேர்த்துக் கொள்ளப்பட்டனர்.
திறப்பு விழா நிகழ்வின் போது. கணனி மயப்படுத்தப்பட்ட நூலக முகாமைத்துவ தகவல் தொகுதியின் 3.14 அண்மைய வெளியீடு (டுiடிசயசல ஆயயெபநஅநவெ யனெ ஐகெழசஅயவழைn ளுலளவநஅ 3.14 எநசளழைn) ஜனாதிபதியினால் திறந்து வைக்கப்பட்டது. முழுர்யு எனும் ழிநn ளழரசஉந ளழகவறயசந ஐப் பயன்படுத்தி நூலகத்தின் பல சேவைகளை தன்னியக்கப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதனை நூலகர் எம். எம். றிபாவுத்தின் மிகவும் நேர்த்தியாக கையாண்டுள்ளார்.
வழமையான நூலக சேவைகளுக்கு மேலதிகமாக டிஜிட்டில் அறிவு நிலையம்இ இலத்திரனியல் வளங்களை பாவிப்பதற்கேற்ப பல கணனிகளையும்இ இணையத் தொடர்பினையும் கொண் டிருக்கின்றது. அத்துடன் மேலும் பல் வேறு நவீன வசதிகள் சேவைகள் வழங்கப்படவுள்ளன. இதற்கேற்ற வகையில் இரு மாடி நூலகக் கட்டடம் அனைத்து வசதிகளுடன் வடிவமைக் கப்பட்டுள்ளது.
இப்பிரதேச மக்களின் கல்வி மறுமலர்ச்சியின் புதிய அத்தியாயம் என வர்ணிக்கப்படும் இந்நூலகத்தை பொதுமக்கள், பாடசாலை மாணவர்கள் பார்வையிட சந்தர்ப்பமளிக்கப்பட்டது. 05 நாட்களில் ஆயிரக் கணக்கான மக்கள் சமுகமளித்து பார்வையிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
அஷ்ரஃப் ஞாபகார்த்த நூலகத்தின் ஒரு பகுதியில் கலாசார நூதனசாலை அமைந்துள்ளது. மக்களின் கலை, கலாசாரம், பாரம்பரியம் என்பனவற்றை பிரதிபலிக்கும் அரும் பொக்கிஷங்கள் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. சிறியவர்கள் மாத்திர மன்றி பெரியவர்களும் பார்வையிட வேண்டிய வரலாற்று அரும் பொருட்கள் பார்வையாளர்களை வியப்பிலாழ்த் தக்கூடியவை.
அது மாத்திரமன்றி இலங்கையின் பிரபல்யம் மிக்க ஆய்வாளர்கள், எழுத்தாளர்கள். கல்வியியலாளர்கள் போன்றவர்களின் தனியான நூல்கள், சேகரிப்புக்கள் என்பனவும் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அந்த வகையில் பேராசிரியர் எம். எம். உவைஸ், புலவர்மணி ஏ. எம். சரிபுத்தீன், அதிபர் யூ. எம். முஹையதீன். பேரா சிரியர் கே. செல்வரட்ணம், நீதிபதி எம். ஏ. எம். ஹுஸைன், புலமையாளர் எம். எம். மஹ்றூப், பேராசிரியர் எஸ். தில்லைநாதன். கேட் முதலியார் எம். எஸ். காரியப்பர். டாக்டர் ஏ. எம். அபூபக்கர், நூலகர் எஸ். எம். கமால்தீன், கல்விப் பணிப்பாளர் யூ. எல். அலியார், பேராசிரியர் சுல்தான் பாவா, கல்வியியலாளர் எஸ். எச். எம். ஜெமீல் ஆகியோரின் தனியான பிரிவுகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன.
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் நான்கு பீடங்களான கலை கலாசார பீடம். வர்த்தக முகாமைத்துவ பீடம். அரபு இஸ்லாமிய கற்கை நெறிகள் பீடம், பொறியியல் பீடம் என்பனவற்றுக்கு மத்தியில் அமையப் பெற்றுள்ள அஷ்ரப் ஞாபகார்த்த நூலகத்தின் உபயோகமானது விரிவுரையாளர்கள். மாணவர்கள் மத்தியில் மேம்படுத்தப்படும் என்பதில் சந்தேகமில்லை. அனைவரும் நூலகத்தின் உச்சப் பயனைப் பெற்றுக்கொள்ள வேண்டுமென்பதே அனைவரினதும் எதிர்பார்ப்பாக உள்ளது.
இவ்வாறானதொரு வரலாற்று முக்கியத்துவமிக்க நூலகத்தை தென்கிழக்கு சமூகத்திற்கு வழங்கிய ஜனாதிபதி மஹிந்த ராஹபக்ஷ, ஒத்துழைப்பு நல்கிய உயர் கல்வியமைச்சர் எஸ். பி. திஸாநாயக்க, செயலுருப்படுத்திய உப வேந்தர் கலாநிதி எஸ். எம். எம். இஸ்மாயில் மற்றும் பதிவாளர் எச். ஏ. சத்தார் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு தென்கிழக்குப் பல்கலைக் கழக சமூகம் இதயபூர்வமான நன்றிகளைப் பதிவுசெய்யும் என்பதில் சந்தேகமில்லை.
நூலகத்தை மாணவர்கள் உட்பட பொதுமக்கள் 05 நாட்கள் பார்வையிட்டதுடன் மாத்திரம் பணியை முடிவுறுத்தாது. இப்பகுதி மக்கள். பாடசாலை மாணவர்கள் நன்மையடையத்தக்க வகையில் நிரந்தரத் திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும். தென்கிழக்குப் பல்கலைக் கழகத்திற்கும் சமூகத்திற்குமிடையில் நெருக்கமான தொடர்பு ஏற்படுத்தப்பட வேண்டும். மக்கள் நன்மையடையும் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். கல்வி. சமூக, பொருளாதாரம் குறித்த ஆய்வினை மேற்கொண்டு மக்களுக்கு உதவ வேண்டும். இவ்விடயங்களில் அதிகாரிகள் கவனம் செலுத்துவது ஆரோக்கியமானதாகும்.
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தை ஆலவிருட்சமாக காலூன்றச் செய்வதில் தன்னை முழுமையாக அர்ப்பணித்து இரு பருவ ஆண்டுகள் பணியாற்றிய முன்னாள் உபவேந்தர் கலாநிதி எம் எல். ஏ. காதர், முதலாவது பதிவாளர் ஏ. எ.ல் ஜெளபர் சாதிக் மற்றும் இரண்டாவது உபவேந்தராகப் பதவி வகித்த கலாநிதி ஹுஸைன் இஸ்மாயில் ஆகியோருடன் பல்கலைக்கழக வளர்ச்சியில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திய முன்னாள் நிர்வாகிகள். பீடாதிபதிகள் தற்போது வேறு சேவை நிலையங்களில் பணியாற்றுபவர்கள் அமரத்துவம் அடைந்தவர்கள் ஆகியோரையும் இச்சந்தர்ப்பத்தில் நாங்கள் நன்றியுடன் நினைவுகூர வேண்டும்.TK
Published by

Leave a comment