கொழும்பு: குவைத்தில் எதிர்வரும் 13ஆம் திகதி முதல் 15ஆம் திகதி வரை நடைபெறும் ஹலால் தொழில்துறையும் அது தொடர்பான சேவைகளும் குறித்த மூன்றாவது மாநாட்டில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி சுற்றாடல் மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி பிரதியமைச்சர் ஏ.ஆர்.எம். அப்துல் காதர் பங்குபற்றுகிறார்.
குவைத் நாட்டின் நீதி, அவ்காப் மற்றும் இஸ்லாமிய விவகார அமைச்சர் கலாநிதி நயாப் மொஹமட் ஹஜாஜ் அல் அஜ்மி தலைமையில் நடபெறும் இம்மாநாட்டில் கலந்துகொள்வதற்காக பிரதியமைச்சர் காதர் இன்று 10ஆம் திகதி குவைத் பயணமாகிறார்.
ஹலால் தொழில்துறை மற்றும் அது தொடர்பான சேவைகள் குறித்து இம்மாநாட்டில் விரிவாக ஆராயப்படவுள்ளது. இம்மாநாட்டில் பங்குபற்றும் பிரதியமைச்சர் காதர், பல முக்கிய அரசியல் தலைவர்களையும், இஸ்லாமிய அறிஞர்களையும் சந்தித்து, இலங்கைக்கும் மத்திய கிழக்கு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவை மேலும் வலுப்படுத்துவது குறித்தும் கலந்துரையாடவுள்ளார்.
Published by

Leave a reply to nizamhm1944 Cancel reply