சிற்றெறும்பின்
சிறுபருக்கைத்
திருடன் நீ !
நாய் வாலை
உன் நரித்தனத்தால்
பூனைவால் என்கின்றாய்
வேப்பையிலும்
இலுப்பையிலும்
பேய் இருப்பதாய் சொல்லிச் சொல்லி
அரசமரக்காடுகளை வளர்க்கின்றாய்
குருவிகளையும் மைனாக்களையும்
நாடுகடத்த திட்டம் தீட்டும் நீ
காக்கை எச்சங்களை கையில் ஏந்தி
கூவும் குயில்களையல்லவா
குற்றம் சொல்கின்றாய் ?

Leave a comment