ராஞ்சி: ஜார்கண்ட் மாநிலத்தில் இளைஞர் ஒருவர் தனது நாக்கை பிளேடால் அறுத்து சிவபெருமானுக்கு காணிக்கை செலுத்திய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜார்கண்ட் மாநிலம் தூகடாவில் உள்ள மகாதேவ்கர்ஹா என்ற சிவபெருமான் கோவிலிலுக்கு லால் மோகன் சோரன் (வயது 17) இன்று காலை சென்றார்.
பயபக்தியுடன் திடீர் என சிவபெருமான சந்நிதியில் முன்னால் பிளேட் ஒன்றை எடுத்து திடீரென தனது நாக்கை அறுத்து ஒரு பாத்திரத்தில் பிடித்து காணிக்கை செலுத்தினார்.இதனால் கோவிலில் இருந்தவர்கள்அதிர்ச்சியடைந்தனர்.
அவர் தன்னுடைய எழுதி வைத்து இருந்த ஒரு குறிப்பில் நான் எனது நாக்கை அறுத்து சிவபெருமானுக்கு காணிக்கை செலுத்துகிறேன். தயவு செய்து என்னை கோவிலை விட்டு வெளியே அனுப்பி விடாதீர்கள். நான் சிவபெருமானின் காலடியில் இருக்க வேண்டும் என கூறி இருந்தார். ஆனால் கோவில் நிர்வாகி உடனடியாக லால்மோகன் சோரனை மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். ஆனால் எவ்வளவோ முயன்றும் மீண்டும் அந்த இளைஞனுக்கு நாக்கை ஒட்ட வைக்க முடியவில்லை.
தற்போது வெறும் திரவ உணவு மட்டும் சாப்பிட்டு வரும் லால்மோகன் சோரன் வாய்பேச முடியாத நிலை ஏற்பட்டுவிட்டது.
கடவுள் நம்பிக்கை என்ற பேரில் இந்தியாவில் இவ்வாறான மூடநம்பிக்கைகள் அதிகரித்துவருவதும், இலங்கையிலும் மதங்களின் மூடநம்பிக்கை என்ற பேரில் இந்துக்களும் ஒரு சில முஸ்லிம்களும் இவ்வாறான இரத்தம் சிந்தும் செயல்களை தன்னைத்தான் வருந்திச் செய்து வருவதும் கவனிக்கத்தக்கது.
Published by



Leave a reply to Azeeza Cancel reply