மட்டக்களப்பு: மே மாதம் எட்டாம் திகதி அனுஷ்டிக்கப்படும் உலக தலஸீமியா தினம் இன்று 08 வியாழக்கிழமை மட்டக்களப்பில் அனுஷ்டிக்கப்பட்டது. மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் ஏற்பாட்டில் இடம்பெற் உலக தலஸீமியா தின நிகழ்வு இன்று வியாழக்கிழமை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் ஒன்று கூடல் மண்டபத்தில் இடம்பெற்றது.
மட்டு போதனா வைத்தியசாலையின் சிறுவர் பிரிவு வைத்திய அதிகாரி திருமதி.சித்திரா கடம்பநாதன் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் எஸ்.இப்றாலெப்பை, பாரம்பரியவியல் நோய்களுக்கான ஆதரவு வைத்திய அதிகாரி தயாரத்ன,டாக்டர் திருமதி விஜி திருகுமார்,உட்பட வைத்திய அதிகாரிகள்,தாதியர்கள், தலஸீமியா நோயினால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் அவர்களின் பெற்றோர்கள் என பலரும் பிரசன்னமாயிருந்தனர்.
இதன் போது தலஸீமியா நோயினால் ஏற்படும் பாதிப்புக்கள் அதிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்வது எவ்வாறு தொடர்பான விழிப்புணர்வு உரைகள் வைத்திய அதிகாரிகளினால் நிகழ்த்தப்பட்டது.
இங்கு தலஸீமியா நோயினால் பாதிக்கப்பட்ட சிறுவர் ,சிறுமிகளின் ஆற்றல்களை பிரதிபலிக்கும் பல்வேறு கலை நிகழ்வுகள் இடம்பெற்றது.
Published by



Leave a comment