உலக மனிதாபிமானத்தை வென்ற ஓர் சவூதி நபரின் சிந்தனையும் செயலும்..

fridge– MJ

ஹெய்ல்: சவூதி ஆரேபியாவின் ‘ஹெய்ல்’ எனும் நகரில் உள்ள சவூதி மனிதர், தனது தேவைபோக மீதமான உணவு பொருட்கள் பசியால் வாடுபவர்களுக்கு கிடைக்கும் வகையில் தனது வீட்டுக்கு வெளியே தெருவில் குளிர்சாதன பெட்டி வைத்துள்ளது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

உலகில் மனிதர்கள் வசதியாகவும், நடுத்தரமாகவும், ஏழையாகவும், மிகவும் ஏழையாகவும் வாழ்ந்து வருகின்றனர். ஒரு புறம் செல்வம் படைத்தவர்கள் வயிராற உண்ட பிறகு மீதமுள்ள உணவை குப்பைத் தொட்டியில் எறியும் அவலம் நடக்கிறது. மறுபுறம் ஏழைகள் உண்ண உணவின்றி பசியால் துடிக்கின்றனர்.

ஆனால் நாம் தேவையான அளவுக்கு சாப்பிட்ட பின்பு மீதமுள்ள உணவு பொருட்களை வீணாக குப்பைத் தொட்டியில் எறிவதற்கு பதில், உணவில்லாத ஏழைகளுக்கு கொடுத்து உதவும் வகையில் தனது வீட்டுக்கு முன்பாக ஒரு குளிர்சாதன பெட்டியை வைத்துள்ளார் சவுதியைச் சேர்ந்த ஒருவர்.

saudi

இதனால் அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் தங்கள் வீடுகளில் மீதமுள்ள உணவுகளை கொண்டு வந்து இந்த குளிர்சாதன பெட்டியில் வைத்துவிட்டு செல்கின்றனர். அவ்வாறு அவர்கள் வைக்கும் உணவு பொருட்களை பசியால் வாடுவோர் வந்து எடுத்து சாப்பிடுகின்றனர்.

இதுபற்றி, ஷெய்ஹ் முகம்மட் அல் ஆரிபி எனும் சவூதி நபர் கூறுகையில்,

fridge

‘ஹெய்ல் வாசிகள் மிகவும் சிறந்தவர்கள், இம்மக்களின் ஒருவரது சிந்தனை இன்று உலத்தை ஈர்த்துள்ளது. இதனால் இப்பகுதிகளிலுள்ள செல்வந்தர்கள் மீதமுள்ள உணவுகளை இங்கு வந்து ஏழைகளுக்காக வைக்கின்றனர். இது ஓர் பெரும் நன்மைகளில் ஒன்றாக அமைகின்றது’ என தெரிவித்தார

சவூதி அரேபியாவில் அதிகமான உணவுப்பொருட்கள் வீணடிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

fruit

Published by

Leave a comment