இஸ்லாமாபாத்: அல்கய்தா அமைப்பின் தலைவராக இருந்த ஒசாமா பின்லேடன் அமெரிக்க படைவீரர்களால் 2011 இல் சுட்டுக்கொல்லப்பட்டார்.. இந்நிலையில், பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்திலுள்ள ‘லால்’ பள்ளிவாயலில் ஒசாமா நினைவு நூலகம் திறக்கப்பட்டுள்ளதாக அமெரிக்காவில் இருந்து வெளியாகும் முன்னணி நாளிதழ் நியூயோர்க் டைம்ஸ் செய்து வெளியிட்டுள்ளது.
‘பாகிஸ்தானில் உண்மையிலேயே கருத்து சுதந்திரம் இருந்தால் எங்கள் நாயகனுக்கு நாங்கள் அன்பை வெளிக்காட்டுவதை தடுக்க முடியாது’ என்று பள்ளிவாயல் சம்பந்தப்பட்ட ஒருவரான அப்துல் அஸீஸ் கூறியதாகவும், தியாகி ஒசாமா பின்லேடன் நூலகம் என்று அறைக்கதவில் எழுதப்பட்டுள்ளதாகவும் அந்த செய்தி மேலும் கூறுகிறது.
அமெரிக்காவை நேருக்குநேர் எதிர்க்க முடியாமல் போராளிகளைவிட்டும் தனித்து தனது குடும்பத்தினருடன் தலைமறைவாகி இருந்த நிலையில் ஒசாமா கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Published by



Leave a comment