காத்தான்குடி: மனித பாவணைக்கு உதவாத முறையில் பொதி செய்யப்பட்ட 170 கிலோ ஒரு தொகுதி கேக் வகைகளை காத்தான்குடி பிரதேச பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் நேற்று 06 செவ்வாய்க்கிழமை காத்தான்குடி பிரதேசத்தில் வைத்து கைப்பற்றியுள்ளனர்.
கம்பஹா மாவட்டத்தின் வியாங்கொடை பிரதேசத்திலுள்ள கம்பணியில் தயாரிக்கப்பட்டு விற்பனைக்காக கடைகளுக்கு கொண்டு செல்வதற்கு காத்தான்குடிக்கு கொண்டுவரபட்ட இக் கேக் வகைகளை கைப்பற்றிய பொதுச் சுகாதார பரிசோதகர்கள் மனித பாவணைக்கு உதவாத முறையில் பொதி செய்யப்பட்ட 170 கிலோ கேக்கையும் ,அதனை விற்பனை செய்யவந்த விற்பனை பிரதிநிதியையும் நேற்று 06 செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பு மாவட்ட நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய போது அதனை விசாரனை செய்த மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி என்.எம்.எம்.அப்துல்லாஹ் குறித்த விற்பனை பிரதிநிதி குற்றத்தை ஒப்புக்கொள்ளாத காரணத்தால் குறித்த விற்பனை பிரதிநிதியை பிணையில் விடுதலை செய்ததோடு கம்பணியின் உரிமையாளரை எதிர்வரும் 27-05-2014 திகதி நீதி மன்றில் ஆஜராகுமாறு உத்தரவிட்டதாக காத்தான்குடி பிரதேச மேற்பார்வை சுகாதார பரிசோதகர் ஏ.எம்.எம்.றபீக் தெரிவித்தார்.
மனித பாவணைக்கு உதவாத முறையில் பொதி செய்யப்பட்ட இக் கேக்கில் 200 ரூபாய் பெறுமதியான 400 கிராம் பக்கட்டுக்கள் 52டும் ,310 ரூபாய் பெறுமதியான 700 கிராம் பக்கட்டுக்கள் 77ழுமாக மொத்தம் 170 கிலோ கேக் வகைகள் இதில் கைப்பற்றப்பட்டடுள்ளதாக பொதுச் சுகாதாரப் பரீசோதகர் கே.ஜெய்சங்கர் தெரிவித்தார்.
காத்தான்குடி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் யூ.எல்.நஸீர்தீனின் வழிகாட்டலில் இக் கேக் வகைகள் கைப்பற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Published by




Leave a comment