சுகாதார அமைச்சின் 450 மில்லியன் ரூபாய் செலவில் மட்டக்களப்பில் புற்று நோய் வைத்தியசாலை

batticaloa hospital (1)– பழுலுல்லாஹ் பர்ஹான்

மட்டக்களப்பு: ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் விஷேட வேலைத் திட்டத்தின் கீழ் சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவின் வழிகாட்டலில் சுகாதார அமைச்சின் 450 மில்லியன் ரூபாய் செலவில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அதி நவீன வசிதிகளுடன் 4 மாடிகளை கொண்ட தனியான புற்று நோய் வைத்தியசாலை ஒன்று அமைக்கப்பட்டு வருகின்றது.

கிழக்கு மாகாணத்தில் முதற்தடவையாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அருகாமையில் தனியான கட்டிடத்தில் 4 மாடிகளைக் கொண்டு அமைக்கப்பட்டுவரும் இப் புற்று நோய் வைத்தியசாலையின் அபிவிருத்தி பணிகள் துரிதகெதியில் இடம்பெற்று வருகின்றது.

துரிதகெதியில் இடம் பெறும் அபிவிருத்திப் பணிகளை பார்வையிட மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் எம்.எஸ்.இப்றாலெப்பை தலைமையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் உதவிப் பணிப்பாளர் ,மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் உட்பட பொறியியலாளர்கள், சுகாதார அமைச்சின் அதிகாரிகள் ஆகியோர் 07-05-2014 இன்று புதன்கிழமை காலை நேரில் சென்று பார்வையிட்டனர்.

இப் புற்று நோய் வைத்தியசாலை மட்டக்களப்பில் திறக்கபடுவதால் மட்டக்களப்பு ,அம்பாறை ,திருகோணாமலை ஆகிய மாவட்ட மக்கள் பெரிதும் நன்மையடையவுள்ளனர்.

4 மாடிகளைக் கொண்டு அமைக்கப்பட்டுவரும் இப் புற்று நோய் வைத்தியசாலையில் வெளி நோயளர் சிகிச்சை பிரிவும், 80 பேர் தங்கி சிகிச்சை பெரும் விடுதி வசதியும், 10 பேர் தங்கி அதி தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெரும் வசதியும் இதில் உள்ளதாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் எம்.எஸ்.இப்றாலெப்பை தெரிவித்தார்.

இங்கு அமைக்கப்பட்டுவரும் புற்று நோய் வைத்தியசாலை இலங்கையில் மஹரகம,கண்டி,காலி கராப்பிடிய,யாழ்ப்பாணம் போன்ற பல்வேறு வைத்திய சாலைகளில் அமையப்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

batticaloa hospital (1)batticaloa hospital1batticaloa hospital2batticaloa hospital3

Published by

Leave a comment