பாலியல் குற்றங்களில் ஈடுபட்ட 848 பாதிரியார்கள் பதவி நீக்கம்

church– SHM

ஜெனீவா: பாலியல் குற்றங்களில் சிக்கிய 848 பாதிரியார்களைப் பதவி நீக்கம் செய்து வாடிகன் திருச்சபை உத்தரவிட்டுள்ளது. ஐ.நா. சபைக் கூட்டம் ஜெனீவாவில் நடந்தது. இதன்போது, சர்வதேச நாடுகளில் மக்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும் குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

பாலியல் குற்றங்கள்:

வத்திக்கான் நகரின் சார்பில் அதன் ஐ.நா. சபை தூதர் ஆர்ச்பிஷப் சில்வானோ தொமாசி கலந்து கொண்டார். பாதிரியார்கள் செய்த பாலியல் குற்றங்கள் பற்றிய கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

நடவடிக்கைகள்:  பலாத்காரம் மற்றும் குழந்தைகளிடம் பாலியல் தொல்லை கொடுத்த பாதிரியார்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை சமர்பித்தார்.

பாதிரியார்கள் பதவிநீக்கம்:  

”கடந்த 10 ஆண்டுகளில் பாலியல் குற்றங்களில் ஈடுபட்ட 848 பாதிரியார்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் 2572 பேருக்கு சிறிய அளவிலான தண்டனைகள் வழங்கப்பட்டுள்ளன” என கூறப்பட்டிருந்தது.

வருடம் வாரியாக பட்டியல்:

அந்த அறிக்கையில் குற்றங்களில் ஈடுபட்டவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து வருடம் வாரியாக குறிப்பிடப்பட்டிருந்தது.

Published by

One response to “பாலியல் குற்றங்களில் ஈடுபட்ட 848 பாதிரியார்கள் பதவி நீக்கம்”

  1. A good move of punishing the culprits but this will not eliminate the root course of the sexual violations. To solve this menace, Vatican has to think of finding alternatives such as permission to marry and continue in the priesthood.

Leave a reply to nizamhm1944 Cancel reply