ஜாமியா நளீமீய்யா இஸ்லாமிய உயர் கல்வி கலாபீடத்திற்கு காத்தான்குடியைச் சேர்ந்த மூன்று பேர் தெரிவு

jamia– MTM. அஸ்மி தாஜூதீன்

காத்தான்குடி: காத்தான்குடி பிரதேச செயலக தொழில் உருவாக்கம் மற்றும் தொழில் வழிகாட்டல் பிரிவு இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி காத்தான்குடி மன்ற அனுசரணையுடன் கடந்த 14.04.2014 அன்று பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடந்த வழிகாட்டல் கருத்தரங்கில் பங்குபற்றிய மாணவர்களிள் கடந்த 24.04.2014 அன்று ஜாமியா நளீமீய்யாவில்

நடந்த எழுத்துப்பரீட்சை மற்றும் நேர்முகப்பரீட்சையில் சித்தி பெற்று நாடளாவிய ரீதியில் 50 மாணவர்கள் இக்கலாபீடத்திற் கல்வி கற்பதற்கு தெரிவு செய்யப்பட்டிரிக்கின்றனர். அவர்களில் விசேடமாக காத்தான்குடியைச் சேர்ந்த மூன்று மாணவர்கள் மேற்படி கலாபீடத்திற்கு தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்க ஒரு விடயமாகும். 

அவர்களின் விபரம் வருமாறு,

1. MZM.இம்தாத் – 42/11, ஷரீப் புரக்டர் வீதி,காத்தான்குடி.02

2. அல்ஹாபில் MF.அஹமட்பரீஹ் – 13,அப்துல் லத்தீப் வீதி, புதிய காத்தான்குடி.03

3. AGM.சயிட் – 160, பழைய வீதி, காத்தான்குடி.02

jamia

மேற்படி தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு காத்தான்குடி பிரதேச செயலாளர்,காத்தான்குடி பிரதேச செயலக மனிதவள அபிவிருத்தி உத்தியோகத்தர், இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி காத்தான்குடி மன்ற நாசிம் என்போர் தங்களின் உளப்பூர்வமான பாராட்டுதல்களையும் வாழ்துக்களையும் தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகின்றனர்.

Published by

Leave a comment