துபாய்: இலங்கை உல்லாச பிரயாண அபிவிருத்தி அதிகாரசபை துபாயில் உள்ள இலங்கை பிரதி தூதுவராலயத்தின் அனுசரணையுடன் துபாயில் தற்போது இடம்பெற்றுவரும் அரபு உல்லாச வர்த்தக கண்காட்சியில் பங்கேற்று வருகின்றது.
இலங்கையின் உல்லாச வர்த்தக துறையை ஊக்குவிக்குமுகமாகவும் மற்றும் அரபு உல்லாச பிரயாணிகளை கவரும் நோக்கிலும் சுமார் 53 பிரயாண கம்பனிகள் இவ் வர்த்தக கண்காட்ச்சியில் பங்கேற்று வருகின்றன
நேற்று ( 2014.05.05 ) தொடங்கிய வர்த்தக கண்காட்ச்சியினை ஐக்கிய அரபு இராச்சியத்தில் உள்ள இலங்கை தூதுவர் டொக்டர் மகிந்த பாலசூரிய, துபாயில் உள்ள இலங்கை பிரதி தூதுவர் எம்.எம். அப்துல் றஹீம் மற்றும் ஸ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ் தலைவர் நிஷாந்த விக்ரமசிங்க, உல்லாச பிரயாண அதிகார சபையின் உதவி இயக்குனர் துசான் விக்ரமசிங்க ஆகியோர் சம்பிரதாய பூர்வமாக ஆரம்பித்து வைத்தனர் இலங்கையின் மரபு கலாச்சார நிகழ்வுகளுடன் தொடங்கிய இவ்வர்த்தக கண்காட்சி பலரையும் கவர்ந்தது.
பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 2700 கம்பனிகள் பங்கு கொள்ளும் இச் சர்வதேச உல்லாச பிரயாண கண்காட்ச்சியில் 153 நாடுகளில் இருந்து சுமார் 20000 பார்வையாளர்கள் துபாய்க்கு வருகை தந்துள்ளனர்.
நான்கு நாட்களுக்கு இடம் பெரும் இவ் வர்த்தக கண்காட்சி 2014.05.08 அன்றுடன் முடிவு பெறும் . யுத்தம் முடிவுக்கு வந்த பின் இலங்கையின் உல்லாச பிரயாணத்துறை வளர்ச்சியடைந்து வருவது குறிப்பிடத்தக்கது.
Published by

Leave a comment