மொஸ்கோ: ரஷ்ய ஆதரவு புரட்சிப் படைகள் யுக்ரைன் நாட்டு ஹெலிகொப்டரை சுட்டு வீழ்த்தியதால் பதற்றம் அதிகரித்துள்ளது. யுக்ரைன் கிழக்குப்பகுதியில் அமைந்துள்ள ஸ்லோவியான்ஸ்க் நகரிலுள்ள அரசு கட்டிடங்களை ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றியுள்ளனர். அவர்கள் மீது தாக்குதல் நடத்த யுக்ரைனும் ராணுவத்தை குவித்துள்ளது.
ஸ்லோவியான்ஸ்க் நகரின் மீது பறந்து வந்த யுக்ரைன் நாட்டு ஹெலிகொப்டரை கிளர்ச்சியாளர்கள் சுட்டு வீழ்த்தியுள்ளனர். இதை யுக்ரைன் நாட்டு வாவதுகாப்பு அமைச்சகமும் உறுதி செய்துள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை முதல் கிளர்ச்சியாளர்களால் சுட்டு வீழ்த்தப்பட்ட நான்காவது ஹெலிகப்டர் இதுவாகும். நவீன ‘இயந்திரத் துப்பாக்கி’யால் சுடப்படட இந்த ஹெலிகொப்டர் கட்டுப்பாட்டை இழந்து ஆறு ஒன்றில் விழுந்தது. ஆனால் அதன் விமானி பத்திரமாக மீட்கப்பட்டார்.
சண்டை நடைபெறும் பகுதியில் வசிக்கும் 15 வயது சிறுமி டயானா செய்தி நிறுவனம் ஒன்றிடம் கூறுகையில், கிளர்ச்சியாளர்கள் வாகனங்கள் மீது யுக்ரைன் நாட்டு ராணுவ பீரங்கிகள் தாக்குதல் நடத்தியை நான் பார்த்தேன். பெட்ரோல் தாங்கி ஒன்றில் நிறுத்தப்பட்டிருந்த எரிபொருள் எடுத்துச் செல்லும் லொறி ஒன்று அப்போது வெடித்து சிதறியது. எனது தந்தையின் தலையில் கண்ணாடி துண்டுகள் புகுந்து காயமடைந்துள்ளார். நாங்கள் எங்கு செனஅறு உயிர்பிழைக்க முடியும் என்று தெரியவில்லை என்றார்.
ரஷிய – யுக்ரைன் ஆதரவாளர்களிடையே நிகழ்ந்த மோதலில் பலர் உயிரிழந்த ஒடெஸ்ஸா நகரிலிருந்து, வன்முறை பரவி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கைது செய்யப்பட்ட 67 கிளர்ச்சியாளர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி, ஒடெஸ்ஸா காவல் நிலையம் மீது வன்முறை கும்பல் ஒன்று ஞாயிற்றுக்கிழமை தாக்குதல் நடத்தியது குறிப்பிடத்தக்கது.
Published by



Leave a comment