‘மத நம்பிக்கையற்ற நாத்திகர்கள் தீவிரவாதிகள்’-சவுதி அரேபியா

saudi-flag[1]கொழும்பு: மத நம்பிக்கையற்ற நாத்திகர்களை தீவிரவாதிகள் என குறிப்பிடும் கடுமையான புதிய சட்டங்களை சவுதி அரேபியா அறிமுகம் செய்திருப்பதாக மனித உரிமை அமைப்புகள் குறிப்பிட்டுள்ளன.

இதில் அரச ஆணைக்கமைய அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் புதிய சட்டங்களில் தீவிரவாதம் குறித்து விபரிக்கப்பட்டுள்ளது. அனைத்து அரசியல் எதிர்ப்பு நடவடிக்கைகள் மற்றும் ஆர்ப்பாட்டங்களும் சமூக ஒழுங்கை பாதிக்கும் செயல்கள் என்று மன்னர் அப்துல்லாஹ்வின் ஆணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிரிய உள்நாட்டு யுத்தத்தில் பங்கேற்க சவுதி அரேபியா வில் இருந்து செல்வோரது எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையிலேயே இந்த புதிய சட்டங்கள் கொண்டுவரப்பட் டுள்ளன. இவ்வாறு சிரியா சென்று திரும்பியோர் சவு+தியின் முடியாட்சியை இல்லாதொழிக்கும் சிந்தனை கொண்டவர்களாக உள்ளனர் என அஞ்சப்படுகிறது.

மன்னர் அப்துல்லா பிறப்பித்திருக்கும் அரச ஆணை யில், சவு+திக்கு வெளியில் யுத்த நடவடிக்கையில் ஈடு படுவது குற்றச் செயலாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு மூன்று முதல் 20 ஆண்டு வரை சிறைத்தண்டனை அறிமுகப்படுத்தப்பட்டிருப்பதாக மனித உரிமை அமைப்பு குறிப்பிட்டுள்ளது. கடந்த மாதம் உள்துறை அமைச்சு வெளியிட்டிருந்த ஒழுங்கு விதியில், சவுதி அரசு தீவிரவாதிகளாக கருதும் பெருந்தொகை குழுக்களின் பட்டியலை வெளியிட்டிருந்தது. அதில் முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பும் உள்ளடங்கியுள்ளது.

புதிய சட்டத்தின் கட்டுரை ஒன்றில் தீவிரவாதம் குறித்த வரையறை வழங்கப்பட்டுள்ளது. அதில், “எந்த வகையிலும் நாத்திக சிந்தனையை முன்வைப்பது அல்லது நாட்டின் அடிப்படை கோட்பாடான இஸ்லாம் மதத்தின் மூல விடயங்களில் சந்தேகங்கள் வெளியிடுவது” தீவிரவாதம் என்று விபரிக்கப்பட்டுள்ளது. மனித உரிமை கண்காணிப்பகத்தின் மத்திய கிழக்கு மற்றும் வட ஆபிரிக்காவுக்கான துணை இயக்குனர் ஜோ ஸ்ட் ரொக் குறிப்பிடும்போது, “சவுதி நிர்வாகம் தம் மீதான விமர்சனங்களை சகித்துக்கொள்வதில்லை. ஆனால் புதிய சட்ட ஒழுங்குகள் எந்த ஒரு சுதந்திரமான கருத்து வெளியிடலையும் குற்றம் மற்றும் தீவிரவாதமாக பார்க்கிறது. இந்த சட்டங்கள் மூலம் அமைதியான எதிர்ப்பு நடவடிக்கைகள் மற்றும் சுதந்திரமான குழுக்களுக்கான செயற்பாட்டை மன்னர் அப்துல்லாஹ் முழுமையாக நிராகரித்துள்ளார்” என்றார்.TK

Published by

Leave a comment