வரலாற்றில் முதற்தடவையாக இலங்கை முஸ்லீம்கள் லண்டனில் ஆர்ப்பாட்டம்!

pro1– MJ

லண்டன்: இலங்கை அரசாங்கத்தின் செல்லப்பிள்ளையாகச் செயற்பட்டுவரும் பொதுபலசேனா இயக்கத்தினரின் இலங்கை முஸ்லிம்கள் மீது திணிக்கப்பட்டுவரும் அடாவடித்தனத்தையும், மனித உரிமை மீறல்களையும் கண்டித்து லண்டனில் உள்ள இலங்கைத் தூரகத்திற்கு முன்னாள் தற்போது கண்டனப் பேரணி ஒன்று இடம்பெற்று வருகின்றது.

இலங்கை பிரித்தானிய புலம்பெயர் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் இப்பேரணியில் பிரித்தானியாவில் வாழும் முஸ்லிம்களில் பலர் கலந்துகொண்டிருப்பதைக் காணமுடிகிறது.

இவ்வார்ப்பாட்டதிற்கு இலங்கையிலுள்ள சில முஸ்லிம் இயக்கங்களும், சில அரசியல்வாதிகளும் தங்களது அதிருப்தியை வெளிக்காட்டியிருப்பதுடன், லண்டன் கொஸ்மொஸ்க் அமைப்பனிரும் தங்களது எதிர்ப்பினைத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

This slideshow requires JavaScript.

Published by

Leave a comment