காத்தான்குடி: காத்தான்குடியில் இயங்கி வரும் சமூக சேவை அமைப்பான (சீடோ)- சமூக பொருளாதார கல்வி அபிவிருத்தி அமைப்பின் ஐந்து வருட பூர்த்தி நிகழ்வும் கணனி கற்கை நெறியை பூர்த்தி செய்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் அண்மையில் காத்தான்குடி பஸ் டிப்போவுக்கு அருகாமையிலுள்ள 167 சி பலநோக்குக் கட்டட மண்டபத்தில் இடம்பெற்றது.
சீடோ- சமூக பொருளாதார கல்வி அபிவிருத்தி அமைப்பின் தலைவர் ஏ.பி.எம்.ஜௌபர் ஜேபி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பரீட், காத்தான்குடி நகர சபை உறுப்பினர் சல்மா அமீர் ஹம்ஸா, காத்தான்குடி சமூக மேம்பாட்டுக்கான மக்கள் ஒன்றியத்தின் தலைவர் ஹாரிஸ் ஜேபி, உட்பட உலமாக்கள், பொலிஸ் அதிகாரிகள், ஊர் பிரமுகர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதன் போது கணனி கற்கை நெறியை பூர்த்தி செய்த மாணவர்களுக்கு அதிதிகளினால் சான்றிதழ் வழங்கப்பட்டன.
Published by




Leave a comment