விபத்துக்குள்ளான புத்தளம் மன்னார் வீதியினை வசிப்பிடமாகக் கொண்ட முஹம்மத் நவாஸ் காலமானார்

janasa– இர்ஷாத் றஹ்மத்துல்லா 

புத்தளம்: புத்தளம் மன்னார் வீதி 2 வது மைல்கல் அருகில் முச்சக்கர வண்டியுடன் மோதியதில் காயமுற்ற நிலையில் புத்தளம் தள வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்ட நபர் இடைநடுவில் மரணமானதாக புத்தளம் பொலீஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு மரணமானவர் புத்தளம் மன்னார் வீதியினை வசிப்பிடமாகக் கொண்ட முஹம்மத் நவாஸ் (வயது 48) என்பவர், கடந்த 4 ஆம் இந்த விபத்து சமபவம் இடம் பெற்றுள்ளது.விபத்துக்குள்ளான முச்சக்கர வண்டி அயீஸ் கிறீம் விற்பணைக்காக தயார்படுத்தப்பட்டதொன்று.புத்தளத்திலிருந்து மன்னார் வீதியூடாக பயணித்துக் கொண்டிருந்த வேளை வீதியின் நடுவில் நின்று கொண்டிருந்த பிரஸ்தாப நபர் தமது இடது பக்கமாக தீடிரென கடக்க முற்பட்ட போது இந்த சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரியவருகின்றது.

காயமுற்ற நபரை உடனடியாக புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.பின்னர் அவரது நிலை கவலைக்கிடமாக இருந்ததால் கொழும்பு வைத்தியசாலைக்கு இடமாற்றம் செய்த போது அவர் மரணமானதாக வைத்தியசாலையின் அதிகாரியொருவர் தெரிவித்தார்.

விபத்துக்குள்ளான முச்சகர வண்டி மற்றும் சாரதி புத்தளம் பொலீஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன்இவிசாரணைகளை பொலீஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

Published by

Leave a comment