கிண்ணியா: கடந்த 28.04.2014 ஆம் திகதி நடைபெற்று முடிந்த திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தின் போது முன்வைக்கப்பட்ட விடயங்கள் சம்பந்தமாக குறிப்பிட்ட கிண்ணியா நகரசபை நகரபிதா டொக்டர் ஹில்மி மஹ்ரூப் குறிப்பிடும் போது
குறித்த கூட்டத்தில் இரண்டு விடயங்கள் தன்னால் முன்வைக்கப்பட்டதாக தெரிவித்தார்.இங்கு குறிப்பிடும் போது அவர் அமைக்கப்பட்ட இடைநிறுத்தப்பட்ட கிண்ணியா வரவேற்பு கோபுர நிர்மாணம் சம்பந்தமாக இடைநிறுத்தப்பட்ட அமைப்புப் பணிகள் மீண்டும் தொடர்வதற்காக பெறப்பட்ட அனுமதி எழுத்து மூலமாக வழங்கப்படவேண்டுமென நகரபிதா கேட்டுக் கொண்டார். அதற்கிணங்க டீசிசி தலைவர் அமைச்சர் சுசந்த புஞ்சிநிலமே அவற்றுக்கான எழுத்து மூலமான அனுமதயினை வழங்குவதாக தெரிவித்தார். அதை எழுத்து மூலமாக செய்து கொடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுமதியினையும் வழங்கினார்.
அடுத்ததாக கிண்ணியாவின் பஸ் போக்குவரத்து சம்பந்தமாக பேசும் போது ஏற்கனவே இரண்டு வருடத்திற்கு முன்னர் ஆலங்கேணி பைசல் நகர் வீதியானது பழுதடைந்து காணப்பட்டதனால் அதனுடான பஸ் போக்குவரத்து தடைப்பட்டது. குறிப்பிட்ட பாதையானது புறநெகும திட்டத்தினூடாக கிண்ணியா நகரசபையினால் ஒன்றறைக் கோடி ரூபா செலவில் புனரமைக்கப்பட்டு முடிக்கப்பட்ட பின்னரும் அதனூடான பஸ் போக்குவரத்து தொடர்ந்து நிறுத்தப்பட்டு காணப்படுகின்ற நிலை நீடிக்க்கின்றது. இதன் மூலமாக மக்கள் போக்குவரத்தின் போது பெறும் சிரமத்தை எதிர்நோக்கி வருவதை அன்றாடம் காணக்கூடியதாகவுள்ளது.
அடுத்ததாக மட்டக்களப்பு வீதியினூடாக வரும் பஸ்கள் அனைத்தும் புஹாரியடி சந்தியில் திருப்பப்படுகிறது. இது குட்டிக்கராச்சி சந்தி வரையில் சென்று திரும்பி வருவதற்குறிய ஏற்பாடுகளை கிழக்கு மாகாண போக்குவரத்து அமைச்சு மிக விரைவாக செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் நகரபிதா டொக்டர் ஹில்மி மஹ்ரூப் வேண்டுகோள் விடுத்தார்.
நகரபிதா கேட்டுக்கொண்டதற்கு இணங்க மாவட்ட ஒருங்கிணைப்புத் தலைவர் போக்குவரத்திற்கு பொறுப்பாகவுள்ள அதிரகாரிகளிடம் இது தொடர்பில் உடனடியாக செயற்பட்டு உரிய நடவடிக்கையினை மேற்கொண்டு செய்து கொடுக்குமாறு உத்தரவிட்டார்.
இதன் மூலமாக அன்றாடம் பிரச்சினைகளை எதிர்நோக்கும் மக்களின் குறைகள் தீர்க்கப்படுமெனவும் அதற்கான நடவடிக்கைகளை தன்னால் தொடர்ந்தும் எடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ளவிருப்பதாகவும் கிண்ணியா நகரசபை நகரபிதா டொக்டர் ஹில்மி மஹ்ரூப் மேலும் தெரிவித்தார்.
Published by

Leave a comment