இலங்கையில் கருச் சிதைவு செய்து கொள்வோரின் எண்ணிக்கை அதிகரிப்பு: 99 வீதமானவர்கள் திருமணம் செய்த பெண்களே!

stop-abortionகொழும்பு: இலங்கையில் கருச் சிதைவு செய்து கொள்வோரின் எண்ணிக்கை தினமும் அதிகரித்த வண்ணம் உள்ளது. அதேவேளை கருச் சிதைவினை மேற்கொள்ள மகப்பேற்று மற்றும் பெண்ணியல் வைத்தியர்களை நாடி வருவோரில் 99 சத வீதமானவர்கள் திருமணம் செய்த பெண்களே ஆவர் என கண்டி போதனா வைத்தியசாலையின் மகப்பேற்று பெண்ணியல் வைத்திய நிபுணர் டபிள்யூ. அபேகோன் தெரிவித்தார்.

மாத்தளை மாவட்ட செயலாளரால் ஏற்பாடு செய்யப்பட்ட சுகவாழ்வு தொடர்பான கல்வி சார் கருத்தரங்கொன்றில் விரிவுரை நிகழ்த்திய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற மேற்படி கருத்தரங்கில் தொடர்ந்தும் உரையாற்றிய அவர் மேலும் தெரிவித்ததாவது: திருமணமான நடுத்தர வயதுப் பெண்களே பெருமளவில் இவ்வாறு வருகை தருவதாகவும் கூறிய அவர், நாற்பது வயதைத் தாண்டிய பின்னர் கருத்தரித்து பிள்ளை பெறுவதில் அவர்களுக்குள்ள அடிப்படையற்ற பீதியும். குடும்பத்திலே வயதுக்கு வந்த பிள்ளைகள் இருப்பது பொருளாதார ரீதியில் அனுபவிக்கும் கஷ்டம் என்பனவும் காரணமாகவே அவர்கள் இந்த நிலைக்குத் தள்ளப்படுவதாக சம்பந்தப்பட்ட பெண்கள் தெரிவிப்பதாகவும் வைத்திய அதிகாரி தெரிவித்தார்.

பெண்கள் இந்த நிலைக்கு ஆளாவதற்கு ஆண்கள் சிந்தித்து செயல்படாமை ஒரு முக்கிய காரணமாக சுட்டிக்காட்டப்படும் அதே வேளை, ஆண்கள் வழி தவறிவிடக் கூ.டாதே என்ற தியாக எண்ணத்தோடு நடந்து கொள்ளும் பெண்கள் விடயத்தில் ஆண்கள் கருணை காட்ட வேண்டிய அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.

de-dia

பெண்கள் இந்த நிலைக்கு ஆளாவது தொடர்பாகவும் அடிக்கடி இவ்வாறு கருச்சிதைவு மேற்கொள்ளப்படுவதால் உடல் ரீதியாக ஏற்படும். பாதிப்புக்கள் குறித்தும் இரு தரப்பினரும் அந்நியோன்னியமாக கருத்துப் பரிமாறி பரஸ்பரம் புரிந்துணர்வோடு செயல்படுவது குடும்ப நலனுக்கு மிகவும் வேண்டற்பாலதாகும்.

எமது நாட்டின் கலாசாரம் பாலியல் பற்றி வெளிப்படையாகப் பேசுவதற்கு கூச்சத்தை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது. இது குடும்பங்களில் பல்வேறுபட்ட பிரச்சினைகளை உருவாக்க வழி செய்வதாகவும் கூறிய வைத்திய அதிகாரி, கணவன், மனைவிக்கு இடையே மானசீக மற்றும் பாலியல் உணர்வுகள் பற்றிய போதிய விளக்கத்தோடு குடும்பம் நிலைபெறுமானால் இவ்வாறான நிலைமைகள் ஏற்படமாட்டாது எனவும் அவர் கூறினார்.

Published by

Leave a comment