இங்கினிமிட்டிய நீர்த்தேக்கத்தின் இரண்டுவான் கதவுகள் இன்று மாலை திறப்பு!
– இர்ஷாத் றஹ்மத்துல்லா
புத்தளம்: இங்கினிமிட்டிய நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் இரண்டு (02) ஒரு அடி இன்று மாலை திறக்கப்பட்டுள்ளதாக இங்கினிமிட்டிய வதிவிட பொறியியலாளர் சுனில் பல்லேகொட சற்று முன்னர் தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில் இங்கினிமிட்டியவிலிருந்து மீஓயவுக்கு நீரின் வேகம் நிமிடத்திற்கு 2000 கனஅடி அளவில் செல்லும் என்றும் இங்கினிமிட்டியவிற்கு அருகில் வசிப்பவர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு புத்தளம் அனர்த்த முகாமைத்துவ மையம் அறிவித்துள்ளது.
தெதுறு ஓயாவின் நீர் மட்டமும் அதிகரித்துள்ளதாகவும், ராஜாங்கணையின் நீர்த்தேக்கத்தின் இரு வான் கதவுகள் 4 அடிக்கு திறக்கப்பட்டிருக்கின்றன.
அதே வேளை தப்போவ நிர்த்தேக்கத்தின் நீர்மட்டம் தற்போது அதிகரித்துள்ளதால் தேவையேற்படும் பட்சத்தில் அதனது வான் கதவுகளும் திறக்க நேரிடும் என நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.
Leave a comment