‘மனிதாபிமானத்துடன் கடமைக்குத் திரும்புங்கள்’: தாதியர்களுக்கு அமைச்சர் மைத்திரி அழைப்பு

districtnurse_010645_tnb[1]கொழும்பு: அப்பாவி நோயாளர்களின் உயிருடன் விளையாடாமல் மனிதாபிமானத்துக்கு மதிப்பளித்து தாதிமார் உடன் கடமைக்குத் திருப்ப வேண்டும் என கேட்டுக் கொண்ட சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன பிரச்சினைகளைப் பேசித் தீர்க்க முழு நேரமும் தயாராகவுள்ளதாகவும் தெரிவித்தார்.

தாதிமார் ஆரம்பித்துள்ள வேலை நிறுத்தம் தொடர்பாக அமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: சுகாதார சேவையில் 106 தொழிற்சங்கங்கள் உள்ளன. வேறு அமைச்சுக்களில் இவ்வாறான எண்ணிக்கையில் தொழிற் சங்கங்கள் இல்லை.இதில் 15 தொழிற்சங்கங்கள் மிக ஆர்வமாக இயங்கு கின்றன.

தொழிற்சங்கங்களுடன் பேசுவதிலேயே அமைச்சரினதும், அமைச்சின் உயர் அதிகாரிகளினதும் அநேக நேரம் செலவாகின்றது.

தாதிமாருக்கு பிரசவமனை பயிற்சி வழங்குவது சுகாதார அமைச்சின் தவறு அல்ல.

அது தொழில்நுட்ப சார் பிரச்சினையே என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

அப்பாவி நோயாளர்களே இதனால் அவதிப்படுகின்றனர். தாதிமார் சங்கத் தலைவர் சங். முரத்தெட்டுவே ஆனந்த தேரர் உட்பட சகல தாதிமார்களும் இதனை உணர்ந்து

கடமைக்குச் சமுகமளிக்க வேண்டும். அரச தாதியருக்கு சகல அனுகூலங்களும் வழங்கியுள்ளது. அவர்களுக்கான

சீருடை கொடுப்பனவை 9000 ரூபாவி லிருந்து 14,500 ரூபாவாகவும், தாதிமார் ஆசிரியர்களின் சீருடை கொடுப்பனவை 8000 ரூபாவிலிருந்து 10,500 ரூபா வரையும் வழங்கினேன். அவர்களின் மேலதிக நேர வேலை கொடுப்பனவை “ரேட்” முறைக்கு மாற்றி மணித்தியாலத்துக்கு 200 ரூபாவாக வழங்கினோம்.

பட்டதாரி வரை கல்வி பயிலும் வாய்ப்பு, தாதிமார் யாப்பை நடைமுறைப்படுத்தல், ஆபத்துக் கொடுப்பனவை அதிகரித்தல், டாக்டர்களுக்கு மட்டும் வழங்கப்பட்ட தொடர்பாடல் அலவன்ஸை தாதிமாருக்கும் வழங்கி 2000 ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.

தாதிமார் சேவை அவசியமான தென்பதால் அரசு இதனை மேற் கொண்டது. குழந்தை பிறப்பின் போது தாதிமார் போன்று குடும்ப சுகாதார அதிகாரிகளின் சேவையும் அவசியமாகும்.

இவ்வளவு காலமும் இரு தரப்பினரும் சுமுகமாகச் சேவையைப் புரிந்தனர். தாதிமாணவியருக்கு பிரசவமனை பயிற்சி வழங்குவதை 2009 ஆம் ஆண்டில் ஆரம்பித்தோம்.

அதனுடன் பிரச்சினை உக்கிரம் அடைந்தது. அமைச்சின் அனுமதியின்றி தாதி பயிற்சி கல்லூரி அதிபர்கள் பிரசவமனை பயிற்சியை ஆரம்பித்ததாக இந்தப் பிரச்சினை உக்கிரமானது.

இவ்விடயமாக அமைச்சின் நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை. இவ்விடயமாக ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட புத்திஜீவிகளின் குழுவின் பரிந்துரைகளின் பேரிலேயே அமைச்சு தொடர்ந்தும் செயற்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

இந்தச் சந்திப்பில் அமைச்சின் செயலர் டொக்டர் நிஹால் ஜயதிலக்க, சுகாதாரச்சேவை பணிப்பாளர் நாயகம் டொக்டர் பாலித்த மஹீபால ஆகியோரும் கலந்து கொண்டனர். TK

Published by

Leave a comment