அசாதாரண சூழல் காரணமாக நவகத்தேகம பிரதேச செயலகப் பிரிவில் 90 குடும்பங்கள் பாதிப்பு

flood%20(4)– இர்ஷாத் றஹ்மத்துல்லா 

நவகத்தேகம: அசாதாரண சூழல் காரணமாக நவகத்தேகம பிரதேச செயலகப் பிரிவில் 90 குடும்பங்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாக புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

நவகத்தேகம பிரதேச செயலகப் பிரிவில் அன்தருவெவ, கிரிமெடியாவ மற்றும் மொரகஹவெவ பிரதேச மக்களே இவ்வாறு பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். அன்தருவெவ குளத்தின் நீர்மட்டம் அதிகரித்தததால் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது. அதே வேளை நரிஓய குளத்தின் நீர் மட்டம் அதிகரித்ததையடுத்து நவகத்தேகம்-கலவெவ பாதையில் ஏற்பட்ட வெள்ளத்தால் வாகனப் போக்குவரத்து சிறிதளவு பாதிக்கப்பட்டுள்ளது.

ராஜாங்கணை நீர்த்தேக்கத்தின் 6 கதவுகள் 3 அடிக்கு திறந்து விடப்பட்டுள்ளதால் கலாஓயாவின் நீர் மட்டம் மேலும் அதிகரித்துள்ளதுடன்இபுத்தளம் –மன்னார் வீதியின் எலுவன்குளம் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

அதே வேளை இங்கின்னி மிட்டிய நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் 199 வரை உயர்ந்திருப்பதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.அதே வேளை நீர் மட்டம் 205 அடிக்கு உயரும் போது இங்கினிமிட்டியவின் வான் கதவுகள் திறக்கப்படும் நிலை ஏற்படுமென அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலை ஏற்படும் அறிகுறி காணப்படுவதால் கலா ஓயா நீர்த்தேக்கத்திற்கு அருகில் இருக்கம் குடும்பங்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

Published by

Leave a comment