ஏறாவூர்: சுமார் 400 கிலோ நிறையுடைய இராட்சத கொம்புத் திருக்கை மீன் ஏறாவூர் சவுக்கடியில் ஆழ்கடல் மீன்பிடியாளர்களின் வலையில் சிக்கியுள்ளது. நீண்ட இறகுகளையும் இரு கொம்புகளையும் கொண்ட இம்மீனை, மீனவர்கள் கரைக்குக் கொண்டு வந்து சேர்க்க சிரமப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.
கடற்கரைச் சந்தை விலையின்படி சுமார் எண்பதினாயிரம் ரூபாவுக்கு இந்த ஒரு கொம்புத் திருக்கை மீன் விலை போகலாம் என்று மீனவர்கள் கூறினர்.
குறித்த மீனைக் காண மக்கள் வருகின்றனர். இவ்வாறான இராட்சத மீன்கள் கடந்த காலங்களில் மட்டக்களப்பு கடல் பிரதேசங்களில் பிடிபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Published by


Leave a comment