இணையத்தில் தொடரும் பாலியல் பணம் பறிப்பு

girl2– AF-89

மணிலா: இணையத்தின் மூலம் வெளிநாடுகளில் இருக்கும் பலருக்கு பாலியல் ரீதியாக ஆசைகாட்டி அவர்களை பின்னர் மிரட்டி உலகப் புகழ்பெற்ற பணம்பறிக்கும் கும்பளை பிலிப்பைன்ஸ் நாட்டின் பொலிஸார் கைது செய்துள்ளனர். 

முதலில் இளம்பெண்கள் போல பேசி, அவர்களை வெப்கம் மூலம் தொடர்புகொண்டு அவர்களுக்கு அரைகுறை ஆடையில் இருக்கும் படங்களை காட்டி அவர்களுக்கு தெரியாமலேயே அவர்களையும் படம்பிடித்து, இந்தக் கும்பல் அவர்களிடம் பணம் பறித்து வந்துள்ளது.

ஆனால், இதனால், பாதிக்கப்பட்ட, ஸ்கொட்லாந்தைச் சேர்ந்த டானியல் பெர்ரி என்னும் 17 வயதுச் சிறுவன் தற்கொலை செய்துகொண்டதால், சர்வதேச பொலிஸார் இந்த விடயம் குறித்து தீவிரமாக புலனாய்வு செய்து இந்தக் குழுவை தேடியுள்ளனர்.

இணையத்தளங்களிலும், முகநூல் போன்ற சமூகவலைத்தளங்களில் பெண்கள் போன்று போலியானகணக்குகளை ஆரம்பித்து, குறுந்தகவல்கள் மற்றும் வீடியோக்கள் மூலமாகத் தொடர்புகொள்கின்றனர்.

குறிப்பாக இளைஞர்கள் தங்களது பருவக் கோளாரினால் தங்களை நிர்வாணிகளாகக் காட்டி, புதிய நண்பி என்ற ரீதியில் இரகசியங்களைப் பகிர்ந்து கொள்கின்றனர். இக்காட்சிகளைக் கச்சிதமாகப் படம்பிடித்து வைத்துக்கொண்டு உரிய நபரை பின்னர் மிரட்டி சுமார் 500 டொலர்கள் தொடக்கம் பல ஆயிரம் டொலர்களைப் பறித்துள்ளனர். இவ்விடயத்தில இளைஞர்களைப் பார்க்கிலும் வயதானவர்கள் அதிகமாக சிக்கப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

fraud1

தங்களது மானம், மரியாதை எல்லாம் இணையத்தில் உலகை வலம் வருமே எனப் பயந்து மாட்டுப்பட்ட பலர் பல்லாயிரம் டொலர்களை இக்கும்பலுக்கு இறைத்துள்ளனர்.

இவ்வாறான செயற்பாடுகள் பிலிப்பைனிலிருந்து இடம்பெறுவதாக அறிந்த பிலிப்பைன்ஸ் பொலிஸார் முதற்கட்டமாக இக்கும்பலைக் கைது செய்திருக்கின்றனர்.

இதுபோன்ற பணம் பறிக்கும் கும்பல்கள், அமெரிக்கா கிறீன் கார்ட், ஆபாசாம், லொட்டரி, மத்திய கிழக்கு வேலை வாய்ப்பு போன்ற பல போலி முகவரிகளில் உலகை வலம்வந்து சம்பந்தப்பட்டவர்களிடம் பணம்பறித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

police

Published by

Leave a comment