– கத்தாரிலிருந்து பழுளுல்லாஹ் பஹ்ஜான் (அப்பாஸி)
டோஹா: கத்தார் ஸ்ரீலங்கா இஸ்லாமிய தஃவா சென்றரின் ஏற்பாட்டில் கிழமை தோறும் இடம்பெரும் வாராந்த ஈமானிய அமர்வு வழமை போல் நேற்று வியாழக்கிழமை மஸ்ஜிதுல் அப்துல் அஸீஸ் அல் கஷ்ஷாபி பள்ளிவாயலில் கத்தார் ஸ்ரீலங்கா இஸ்லாமிய தஃவா சென்றர் தலைவர் அஷ்ஷெய்க் இத்ரீஸ் (ஸஹ்வி) தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் ”இல்லறம் ஒரு நல்லறம்” எனும் தலைப்பில் அஷ்ஷெய்க் இஸ்மாயில் (ஸலபி) விசேட உரை நிகழ்த்தினார்.
வாரந்தோறும் ஆண்களுக்கும் பெண்களுக்குமாக இடம்பெறும் இம்மார்க்க பயான் நிகழ்வில் பெருமளவிலான ஆண்கள் பெண்கள் கலந்து கொண்டனர்.
இதேவேளை இன்று வெள்ளிக்கிழமை 02.05.2014 ஜூம்மாத் தொழுகையைத் தொடர்ந்து அஸீஸிய்யா மஸ்ஜிதுல் முழப்பர் ஜூம்மாப் பள்ளிவாயலில் விசேட பயான் நிகழ்ச்சியொன்று இடம்பெற்றது.
இலங்கையிலிருந்து வருகை தந்துள்ள பிரபல சொற்பொழிவாளர் அஷ்ஷெய்க் இஸ்மாயில் ஸலபியினால”அறிவின் நிழலில்” எனும் தலைப்பில் இந்த பயான் நிகழ்ச்சி இடம்பெற்றது.
இதன்போதும் பெருமளவிலான சகோததரர்கள் கலந்து கொண்டனர்.
ஒவ்வொரு வியாழன் தோறும் மஸ்ஜித் அப்துல் அஸீஸ் கஷ்ஷாபில் இரவு 8.45 தொடக்கம் 9.45 வரையும் வெள்ளிக்கிழமைகளில் ஜூம்மாத் தொழுகையைத் தொடர்ந்து பனாரில் தொடர் இஸ்லாமிய வகுப்புக்கள் அஸீஸிய்யா மஸ்ஜிதுல் முழப்பரில் குத்பா தமிழ் மொழியெர்ப்பும் என பல்வேறு நிகழ்வுகள் வாரந்தோறும் இடம்பெற்று வருகின்றன.
குறித்த SLDC தஃவா அமைப்பு கடல் கடந்து வாழும் தமிழ் பேசும் சகோதரர்களை ஒன்றிணைத்து ஆண்மீக ரீதியில் அவர்களை வளர்த்தெடுக்க பல்வேறு வேலைத்திட்டங்கை செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
எல்லாம் வல்ல அல்லாஹ் அதை ஏற்றுக்கொள்வானாக! ஆமீன்
Published by



Leave a comment