காத்தான்குடி: நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் ஏற்பாடு செய்த மேதின நிகழ்வும், காத்தான்குடி நகரசபை தொழிலாளிகளை கௌரவிக்கும் நிகழ்வும் நேற்று (01.05.2014) காத்தான்குடியில் நடைபெற்றது.
PMGGயின் மக்கள் அரங்கில் மாலை 7.00 மணியளவில் ஆரம்பமான இந்நிகழ்வில் விஷேட அழைப்பாளர்களாகக் கலந்துகொண்ட நகரசபைத் தொழிலாளர்கள் 80க்கும் அதிகமானவர்களுடன் PMGGயின் சூறாசபை உறுப்பினர்கள், செயற்குழு உறுப்பினர்கள், அங்கத்தவர்கள் மற்றும் ஆதரவாளர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
PMGGயின் சூறாசபை அமீர் அஷ்ஷெய்க் MBM.பிர்தௌஸ் (நளீமி) அவர்கள் இந்நிகழ்விற்குத் தலைமை தாங்கியதுடன் வரவேற்புரையையும் தலைமையுரையையும் நிகழ்த்தினார்.
அதனைத் தொடர்ந்து நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் (NFGG) தலைமைத்துவ சபை உறுப்பினர் அஷ்ஷெய்க் MR.நஜா முஹம்மட் அவர்களும், நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் சூறாசபை உறுப்பினர் பொறியியலாளர் MM.அப்துர் ரஹ்மான் அவர்களும் உரையாற்றினார்கள்.
இதேவேளை இந்நிகழ்வில் கௌரவிக்கப்பட்ட நகரசபை தொழிலாளர்களின் சார்பாக சகோ. A.ஜுனைதீன் அவர்கள் உரையாற்றினார்.
இந்நிகழ்வின் இறுதியாக நகரசபைத் தொழிலாள் அனைவருக்கும் உலர் உணவுப் பொதிகளும் வழங்கி வைக்கப்பட்டன.
Published by




Leave a comment