பீஜிங்: நீங்கள் எல்லாரும் ஒரு வீட்டின் மேற்கூரையில் நடக்க முடிந்தால் என்ன செய்வீர்கள்? ஆச்சரியத்தில் உறைந்து போவீர்கள் அல்லவா?அதுதான் நடக்கின்றது சீனாவில். சுற்றுலாப்பயணிகளைக் கவரும் வகையில் சீனாவின் ஷங்காய் நகரில் இந்த ‘தலைகீழ்’ வீடு உருவாக்கப்பட்டுள்ளது.
ஆனால், இந்த வீட்டின் தளம் சாய்ந்து இருப்பதால்தான் நான் தலை சுற்றிப் போனதாக உணர்கின்றேன்’ என்று 27 வயதான ஹுங் ஹூய் தெரிவித்துள்ளார்.
மற்றொரு சுற்றுலாப் பயணியான சன் மின்ஜீஓ, குளியலறை கூட தலைகீழாய் இருப்பதைப் பார்த்து வியந்து போய்விட்டதாக தெரிவித்துள்ளார்.
‘அந்த சிறிய கழிவறை வடிவமைப்பு, என் மனதில் பெரிய ஆச்சரியத்தை உண்டாக்கி விட்டது. மிகுந்த கலை ஆர்வத்துடன் இந்த வடிவமைப்பை உருவாக்கியுள்ளனர். அதைப் பார்த்தபோது எங்கே தண்ணீர் தலையில் ஊற்றிவிடப் போகின்றது என்று பயந்துவிட்டேன்’ என்று கூறியுள்ளார்.
9 வயதான வாங்க் யிஜின் இன்னும் அந்த தலைகீழ் ஆச்சரியத்தில் இருந்து விடுபட முடியாமல் வீட்டிற்கு வெளியில் வந்துள்ளார். ‘வீட்டின் மேற்கூரையில் நிற்பது போலவே நான் உணர்ந்தேன்.விசயம் என்னவென்றால் நான் கீழே விழவில்லை என்பதுதான்’ என்று கூறியுள்ளார்.
இந்த வீடானது ‘பொலீஸ்’ (Polish) டிசைனர் ஒருவரால் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த வீட்டின் கட்டமைப்பு நவம்பரில் ஆரம்பித்து, 5 மாதங்கள் எடுத்துக் கொண்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அதிகளவான உள்ளுர் மற்றும் சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்துவரும் இவ் அதிய தலைகீழ் வீட்டைக் காண்பதற்கு குறைந்த கட்டணங்களே அறவிடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Published by




Leave a comment