அஸீஸியாவில் விசேட பயான் நிகழ்ச்சி

azeeziya– பழுளுல்லாஹ் பஹ்ஜான் (அப்பாஸி)

அஸீஸிய்யா: கத்தாரில் இயங்கும் ஸ்ரீலங்கா இஸ்லாமிய தஃவா சென்றரின் (எஸ்.எல்.டீ.சி) ஏற்பாட்டில் இன்று வெள்ளிக்கிழமை 02.05.2014 ஜூம்மாத் தொழுகையைத் தொடர்ந்து அஸீஸிய்யா மஸ்ஜிதுல் முழப்பர் ஜூம்மாப் பள்ளிவாயலில் விசேட பயான் நிகழ்ச்சியொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இலங்கையிலிருந்து வருகை தந்துள்ள பிரபல சொற்பொழிவாளர் அஷ்ஷெய்க் இஸ்மாயில் ஸலபியினால”அறிவின் நிழலில்” எனும் தலைப்பில் விசேட பயான் நிகழ்ச்சி இடம்பெறவுள்ளது.

இந்நிகழ்வில் தவறாது கலந்து கொள்வதோடு பயன்பெருமாறு ஏற்பாட்டாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இதன்போது கலந்து கொள்பவர்களுக்கு பகலுணவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

azeeziya

Published by

Leave a comment