விரைவில் இடம்பெற இருக்கும் இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கட் தொடர்

india-v-pakistan-semi-final-mohali[1]– SHM

லாஹூர்: இந்திய கிரிக்கெட் அணியுடன் 5 தொடர்கள் கொண்ட போட்டியில் விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் நாஜம் சேதி தெரிவித்துள்ளார்.

 T20, 2014 உலகக்கிண்ணப் போட்டிகளுக்கு பிறகு பாகிஸ்தான் இந்தியாவுடன் விளையாட ஒப்பந்தம் செய்யப்படும் என அறிவித்திருந்தது.

இந்நிலையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் நாஜம் சேதி,

‘மூன்று உள்நாட்டுத் தொடர் மற்றும் இரண்டு வெளிநாட்டு தொடர்களில் விளையாட இரு நாட்டு கிரிக்கெட் சங்கங்களும் ஒப்பந்தம் செய்துள்ளதாகவும் பாகிஸ்தான் அணி நடத்தும் உள் நாட்டுத் தொடர் ஐக்கிய அரபு எமிரேட் அல்லது வேறு எதாவது ஒரு நாட்டில் நடத்தப்படும்’ என்று கூறியுள்ளார்.

மேலும் பாதுகாப்பு விவகாரத்தில் பாகிஸ்தானில் 50 சதவிகித முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் நாஜம் சேதி தெரிவித்துள்ளார். இத்தொடர் உலகக் கிண்ணம் 2015 இற்கு முன்னர் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Published by

Leave a comment