கோலாலம்பூர்: மாயமான விமானம் குறித்த முதல்கட்ட அறிக்கையை மலேசிய அரசு இன்று வெளியிடுகிறது. மார்ச் 8ம்தேதி மலேசியாவில் இருந்து சீன தலைநகர் பெய்ஜிங்கிற்கு 239 பயணிகளுடன் புறப்பட்ட மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் நடுவானில் திடீரென மாயமானது.
சுமார் இரண்டு மாதங்கள் ஆகும் நிலையில் இன்று அச்சம்பவம் குறித்த முதல் அறிக்கையை வெளியிட உள்ளது மலேசிய அரசு.
இத்தகவலை பாதுகாப்புத்துறை அமைச்சர் ஹிசாமுதீன் ஹூசைன் பத்திரிகையாளர்களுக்கு தெரிவித்தார். ஆனால் மேற்கொண்டு எந்த தகவலையும் அளிக்க மறுத்துவிட்டார்.
ஓய்வு பெற்ற மலேசிய ஏர் தலைமை மார்ஷல் அன்குஷ் ஹஸ்டன் இதுபற்றி கூறுகையில்,
‘மாயமான விமானம் இந்திய பெருங்கடலில்தான் விழுந்திருக்க வேண்டும் என்று சந்தேகிக்கப்படுகிறது. அரசின் அறிக்கையில் என்ன தகவல் இருக்கும் என்ற ஆர்வத்தில் உள்ளோம்’ என்றார்.
Published by

Leave a comment