NFGGயின் வேண்டுகோளின் பேரில் வடக்கு மற்றும் கிழக்கு முதலமைச்சர்கள் சிநேகபூர்வ சந்திப்பு

Njeeb A Majeed & CV. Wiknesvaran– PMGG ஊடகப் பிரிவு

திருகோணமலை: நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் (NFGG) வேண்டுகோளின் பேரில் வடக்கு மாகாண முதலமைச்சர் கௌரவ CV.விக்னேஷ்வரன் அவர்களுக்கும் கிழக்கு மாகாண முதலமைச்சர் கௌரவ நஜீப் A மஜீத் அவர்களுக்கும் இடையில் விஷேட சந்திப்பு ஒன்று இடம்பெற்றது.

கிழக்கு மாகாண முதலமைச்சரின் அலுவலகத்தில் இன்று (30.04.2014) காலை முதற்கட்டமாக இடம்பெற்ற இச்சந்திப்பு நட்பு ரீதியான சந்திப்பாக அமைந்திருந்தது.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நல்லுறவை வலுப்படுத்துவதும், பேணுவதும் இச்சந்திப்பின் முக்கிய நோக்கமாக அமைந்திருந்தது.

‘புல்மோட்டை மீனவர்கள் எதிர்நோக்கும் மீன்பிடி தொடர்பான பிரச்சினைகள்’, ‘வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நிலவும் காணிப் பிரச்சினைகள்’, ‘வடக்கு மாகாணத் திணைக்களங்களில் கடமையாற்றும் கிழக்கு மாகாணத்தில் குடியிருப்புக்களைக் கொண்ட உத்தியோகத்தர்கள் தொடர்பான பிரச்சினைகள்’ ஆகிய முக்கிய மூன்று விடயங்கள் தொடர்பில் இச்சந்திப்பின்போது கலந்துரையாடப்பட்டது.

Njeeb A Majeed & CV. Wiknesvaran

இக்கலந்துரையாடலில் இறுதி முடிவுகள் எதுவும் எட்டப்படாத நிலையில் மேற்படி விடயங்கள் தொடர்பில் உரிய கவனம் செலுத்துவதற்கு உடன்பாடு காணப்பட்டது.

இவ்வாறான சந்திப்புக்கள் எதிர்கால செயற்பாடுகளுக்கு நல்ல ஆரம்பமாக அமையும் என எதிர்பார்ப்பதாக வடக்கு மாகாண முதலமைச்சர் CV.விக்னேஷ்வரன் இதன்போது தெரிவித்தார்.

மேற்படி சந்திப்பில் வடக்கு மாகாணசபை உறுப்பினர் அஷ்ஷெய்க் அஸ்மின் அய்யூப் (நளீமி), நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் சூறாசபை அமீர் அஷ்ஷெய்க் MBM.பிர்தௌஸ் (நளீமி), கிண்ணியா நகரசபை உறுப்பினர் மௌலவி ஜுனைதீன், காத்தான்குடி நகரசபை உறுப்பினர் SH.பிர்தௌஸ் (ஆசிரியர்), கிண்ணியா நகரசபை முன்னாள் உறுப்பினர் நிஜாம் மற்றும் கிழக்கு மாகாண முதலமைச்சரின் செயலாளர் ULA. அசீஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Published by

Leave a comment