ஜனாஸா அறிவித்தல்

janasaகாத்தான்குடி: காத்தான்குடி 5, ஜாமியுழ்ழாபிரீன் ஜூம்ஆ பள்ளிவீதியைச் சேர்ந்த, ஓய்வுபெற்ற அதிபர் அல்ஹாஜ் எம்.எஸ்.எம்.ஏ. கரீம் ஆசிரியர் அவர்கள் இன்று 30-04-2014  காலமானார்கள். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னார் சிவானந்தா வித்தியாலயத்தின் பழைய மாணவரும், காத்தான்குடி அல்ஹிறா வித்தியாலயத்தின் ஓய்வுபெற்ற சிறந்த அதிபர்களுள் ஒருவருமாவார்.

அண்மையில் சுகவீனம் காரணமாக மட்டக்களப்பு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அன்னார் இன்று காலமானார்கள்.

ஜனாஸா நல்லடக்கம் பற்றி பின்னர் அறிவிக்கப்படும்.

காத்தான்குடி மாணவர்களுக்கு தனது கல்விச் சேவையினை செய்து தற்பொழுது இறையடி சேர்ந்திருக்கும் அன்னாருக்கு அல்லாஹ் ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் சுவர்க்கத்தை அருள்பாளிக்கப் பிரார்த்திப்பதுடன, அன்னாரது குடும்பத்தினர்களுக்கும் எமது வாசகர் சார்பான அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

careem
மர்ஹூம் கரீம் ஆசிரியர் அவர்கள் இடமிருந்து வலம் முதலாவது

Published by

Leave a comment