காத்தான்குடி: காத்தான்குடி கலை கலாசார மேம்பாட்டுக்கழகமும் டிஜிடல் மீடியாவும் இணைந்து வழங்கும் பிறைப்பூக்கள் மாபெரும் கலை நிகழ்வு காத்தான்குடி சமூக மேம்பாட்டுக்கான மக்கள் ஒன்றியத்தின் தலைவர் எம்.ஐ.எம்.ஹாரிஸ் ஜேபி தலைமையில் எதிர்வரும் 02-05-2014 வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணிக்கு காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் இடம்பெறும்.
இங்கு காத்தான்குடியில் கலைத்துறையை புதிய பாதைக்கு நகர்த்திச் செல்லும் மாபெரும் முயற்சியில் உருவாக்கப்பட்ட சுஜாவின் கேள்விக்குறி குறுந்திரைப்பட வெளியீடும் ,ரம்பரே ரம்பா புகழ் ரி.எல்.ஏ.அஸீஸ் மாமாவின் கதையும் கானமும் கலை நிகழ்வும்,செரண்டிப் முஸ்தபா குழுவினரின் சிறப்பு நகைச்சுவை நாடகங்களும் இடம்பெறும்.
அனுமதி இலவசம் என்பதால் இதில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு காத்தான்குடி கலை கலாசார மேம்பாட்டுக்கழகமும் டிஜிடல் மீடியாவும் வேண்டுகொள் விடுக்கின்றது.
Published by



Leave a comment